• Sep 07 2025

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமிக்கு தீர்த்தோற்சவம்

Chithra / Sep 7th 2025, 2:14 pm
image


மட்டக்களப்பு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் இன்று (07)  தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மூங்கிலாற்று சங்கமத்தில் நடைபெற்றது.

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் கிழக்கிழங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம்  கடந்த 18 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கதிர்காம ஆலயத்தின் பூஜை முறைகளுக்கு ஒப்பானதாக நடைபெறும் இந்த ஆலயத்தின் உற்சவமும் கப்புகர்களினால் வாய்கட்டப்பட்டு உற்சவம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இருபது தினங்கள் நடைபெற்ற இந்த மஹோற்சவத்தில் தினமும் சுவாமிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று முருகப்பெருமானின் வெளி வீதி உலா நடைபெற்றது.

இன்று காலை முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று வேல்தாங்கிய பேழை ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு  தீர்த்தோற்சவம் வாவிக்கரையிலுள்ள தீர்த்தக்கேணியில் நடைபெறவுள்ளது.

இதில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டிருந்தனர்.

தீர்த்த உற்சவத்தினை தொடர்ந்து வேல்தாங்கிய பேழை ஊர்வலமாக ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டபோது அங்கு சிறுமிகள் ஆரார்த்தி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றபோது சிறுமிகள் மயங்கிவிழும் அற்புத நிகழ்வு நடைபெற்றது.


பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமிக்கு தீர்த்தோற்சவம் மட்டக்களப்பு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் இன்று (07)  தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மூங்கிலாற்று சங்கமத்தில் நடைபெற்றது.இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் கிழக்கிழங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம்  கடந்த 18 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.கதிர்காம ஆலயத்தின் பூஜை முறைகளுக்கு ஒப்பானதாக நடைபெறும் இந்த ஆலயத்தின் உற்சவமும் கப்புகர்களினால் வாய்கட்டப்பட்டு உற்சவம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.இருபது தினங்கள் நடைபெற்ற இந்த மஹோற்சவத்தில் தினமும் சுவாமிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று முருகப்பெருமானின் வெளி வீதி உலா நடைபெற்றது.இன்று காலை முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று வேல்தாங்கிய பேழை ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு  தீர்த்தோற்சவம் வாவிக்கரையிலுள்ள தீர்த்தக்கேணியில் நடைபெறவுள்ளது.இதில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டிருந்தனர்.தீர்த்த உற்சவத்தினை தொடர்ந்து வேல்தாங்கிய பேழை ஊர்வலமாக ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டபோது அங்கு சிறுமிகள் ஆரார்த்தி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றபோது சிறுமிகள் மயங்கிவிழும் அற்புத நிகழ்வு நடைபெற்றது.

Advertisement

Advertisement

Advertisement