• May 28 2025

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்: பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பு..!

Sharmi / May 26th 2025, 12:18 pm
image

நுவரெலியா பிரதேசத்தில் இந்த நாட்களில் மழையுடன் கடும் பனிமூட்டம் நிலவுவதால் முன்னோக்கி செல்லும் வாகனங்களை பார்க்க முடியாமல் விபத்துக்கள் ஏற்படுவதால் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நுவரெலியா நகர எல்லை , ஹவாஎலியா பொரலந்த உடபுஸ்ஸல்லாவ பிரதான வீதி, நானுஓயா, தலவாக்கலே ஹட்டன் பிரதான வீதி, நானுஓயா ரதல்ல குறுகிய வீதி, நுவரெலியா மீபிளிமான பட்டிப்பொல அணுகு வீதிகள், போன்ற பகுதிகளில் இந்த அடர்ந்த பனிமூட்டம் மற்றும் வீதியில் போனிகல் குதிக்கும் அபாயம் உள்ளதால், மிகக் குறைந்த வேகத்தில் வாகனங்களை செலுத்துமாறும் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,

தமக்கு முன்னால் வரும் வாகனங்களை பார்க்க முடியாத நிலையில் வாகன சாரதிகள் ஒவ்வொரு வாகனத்தின் மின்விளக்குகளையும் ஒளிரவிடுமாறு வாகன சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்: பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பு. நுவரெலியா பிரதேசத்தில் இந்த நாட்களில் மழையுடன் கடும் பனிமூட்டம் நிலவுவதால் முன்னோக்கி செல்லும் வாகனங்களை பார்க்க முடியாமல் விபத்துக்கள் ஏற்படுவதால் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நுவரெலியா நகர எல்லை , ஹவாஎலியா பொரலந்த உடபுஸ்ஸல்லாவ பிரதான வீதி, நானுஓயா, தலவாக்கலே ஹட்டன் பிரதான வீதி, நானுஓயா ரதல்ல குறுகிய வீதி, நுவரெலியா மீபிளிமான பட்டிப்பொல அணுகு வீதிகள், போன்ற பகுதிகளில் இந்த அடர்ந்த பனிமூட்டம் மற்றும் வீதியில் போனிகல் குதிக்கும் அபாயம் உள்ளதால், மிகக் குறைந்த வேகத்தில் வாகனங்களை செலுத்துமாறும் அறிவித்துள்ளனர்.இது தொடர்பில் நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், தமக்கு முன்னால் வரும் வாகனங்களை பார்க்க முடியாத நிலையில் வாகன சாரதிகள் ஒவ்வொரு வாகனத்தின் மின்விளக்குகளையும் ஒளிரவிடுமாறு வாகன சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement