• Jul 12 2025

திடீரென 4000 ரூபாவால் உயர்ந்த தங்கத்தின் விலை!

shanuja / Jul 12th 2025, 5:57 pm
image

கடந்த இரு நாட்களுடன் ஒப்பிடுகையில், இன்று (12) தங்கத்தின் விலை 4,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 


நாளுக்கு நாள் தங்கத்தின் விலை கூடிச் செல்வதால் நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

 

கடந்த இரு நாட்களாக 24 கரட் தங்கம்  ஒரு பவுண்  264,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் ஒரு பவுண்  244,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்பட்டது. 

 

ஆனால் இன்று (12) திடீரென தங்கத்தின் விலை உயர்வடைந்ததால் தங்கம் வாங்கக் காத்திருந்த நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


அந்த வகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 

24 கரட் தங்கம்  ஒரு பவுண்  268,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம்  ஒரு பவுண்  248,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

 

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,500 ரூபாவாகவும்  22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது என்று கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 


நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்வடைந்து செல்வதால் நகை வாங்கும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

திடீரென 4000 ரூபாவால் உயர்ந்த தங்கத்தின் விலை கடந்த இரு நாட்களுடன் ஒப்பிடுகையில், இன்று (12) தங்கத்தின் விலை 4,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். நாளுக்கு நாள் தங்கத்தின் விலை கூடிச் செல்வதால் நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.  கடந்த இரு நாட்களாக 24 கரட் தங்கம்  ஒரு பவுண்  264,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் ஒரு பவுண்  244,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்பட்டது.  ஆனால் இன்று (12) திடீரென தங்கத்தின் விலை உயர்வடைந்ததால் தங்கம் வாங்கக் காத்திருந்த நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம்  ஒரு பவுண்  268,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம்  ஒரு பவுண்  248,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.  இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,500 ரூபாவாகவும்  22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது என்று கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்வடைந்து செல்வதால் நகை வாங்கும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement