இராமநாதபுரம் மாவட்டம் - திருவாடானை வட்டத்தில் அமைந்துள்ள தொண்டியில் மீனவர் ஒருவரின் வலையில் 15 லட்சம் மதிப்பிலான மீன்கள் சிக்கியுள்ளது.
கண்ணன், என்பவரது வலையிலேயே எதிர்பாராதவிதமாக சுமார் ஐந்து டன் எடையுள்ள ஏராளமான பாறை மீன்கள் சிக்கியுள்ளன.
இந்த அதிர்ஷ்டசாலியான மீனவருக்கு உதவ, சக மீனவர்கள் சிலர் உடனடியாக விரைந்து சென்று,
மூன்று நாட்டுப்படகுகளைப் பயன்படுத்தி, கண்ணனின் வலையில் சிக்கியிருந்த அனைத்து மீன்களையும் சேகரித்து, கரைக்குக் கொண்டு வந்துள்ளனர்.
இந்த மிகப்பெரிய பாறை மீன்களின் பெறுமதி சுமார் 15 லட்சம் ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற மிகப்பெரிய அளவிலான மீன் பிடிப்பு, நாட்டுப்படகு மீனவர்களுக்கு மிகவும் அரிதாகவே கிடைக்கும் என்பதால், இந்த அரிய நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடலின் கொடையால் கிடைத்த இந்த ஐந்து டன் மீன்கள், கண்ணன் உள்ளிட்ட மீனவர்களின் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி, இந்த அதிர்ஷ்டசாலி மீனவர்களை வாழ்த்தி மகிழ்ந்தனர்.
மீனவருக்கு அடித்த 'ஜாக்பாட்'; ஒரே தடவையில் வலையில் சிக்கிய 15 இலட்சம் ரூபா பெறுமதியான மீன்கள் இராமநாதபுரம் மாவட்டம் - திருவாடானை வட்டத்தில் அமைந்துள்ள தொண்டியில் மீனவர் ஒருவரின் வலையில் 15 லட்சம் மதிப்பிலான மீன்கள் சிக்கியுள்ளது. கண்ணன், என்பவரது வலையிலேயே எதிர்பாராதவிதமாக சுமார் ஐந்து டன் எடையுள்ள ஏராளமான பாறை மீன்கள் சிக்கியுள்ளன. இந்த அதிர்ஷ்டசாலியான மீனவருக்கு உதவ, சக மீனவர்கள் சிலர் உடனடியாக விரைந்து சென்று,மூன்று நாட்டுப்படகுகளைப் பயன்படுத்தி, கண்ணனின் வலையில் சிக்கியிருந்த அனைத்து மீன்களையும் சேகரித்து, கரைக்குக் கொண்டு வந்துள்ளனர்.இந்த மிகப்பெரிய பாறை மீன்களின் பெறுமதி சுமார் 15 லட்சம் ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற மிகப்பெரிய அளவிலான மீன் பிடிப்பு, நாட்டுப்படகு மீனவர்களுக்கு மிகவும் அரிதாகவே கிடைக்கும் என்பதால், இந்த அரிய நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடலின் கொடையால் கிடைத்த இந்த ஐந்து டன் மீன்கள், கண்ணன் உள்ளிட்ட மீனவர்களின் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி, இந்த அதிர்ஷ்டசாலி மீனவர்களை வாழ்த்தி மகிழ்ந்தனர்.