• Jul 06 2025

120.5 பில்லியன் வருவாயை ஈட்டிய கலால் துறை!

shanuja / Jul 5th 2025, 6:07 pm
image

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை கலால் துறை 120.5 பில்லியன் ரூபா  வருவாயைப் பதிவு செய்துள்ளது. இது நிதி அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 102.6 சதவீதத்தை எட்டியுள்ளது.


இது தொடர்பில் கலால் துறை வட்டாரங்கள் வெளியிட்ட கருத்துக்களில், 


120.5 பில்லியன் ரூபா அந்தக் காலத்திற்கான வருவாய் இலக்கை விட அதிகமாக உள்ளது. இது வசூல் செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டில், கலால் துறை அரசாங்கத்திற்கு  226.7 பில்லியன் ரூபா ஈட்டிக்கொடுத்தது. இது 2022 இல்  178.6 பில்லியனாகவும், 2021 இல்  170.3 பில்லியனாகவும் இருந்தது என்று தெரிவித்துள்ளது.

120.5 பில்லியன் வருவாயை ஈட்டிய கலால் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை கலால் துறை 120.5 பில்லியன் ரூபா  வருவாயைப் பதிவு செய்துள்ளது. இது நிதி அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 102.6 சதவீதத்தை எட்டியுள்ளது.இது தொடர்பில் கலால் துறை வட்டாரங்கள் வெளியிட்ட கருத்துக்களில், 120.5 பில்லியன் ரூபா அந்தக் காலத்திற்கான வருவாய் இலக்கை விட அதிகமாக உள்ளது. இது வசூல் செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டில், கலால் துறை அரசாங்கத்திற்கு  226.7 பில்லியன் ரூபா ஈட்டிக்கொடுத்தது. இது 2022 இல்  178.6 பில்லியனாகவும், 2021 இல்  170.3 பில்லியனாகவும் இருந்தது என்று தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement