• Dec 02 2024

அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்களுக்கு விசேட விடுமுறை - தேர்தல் ஆணையகத்தின் அறிவிப்பு

Chithra / Nov 11th 2024, 8:02 am
image

 

எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு அனைத்து அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள், நிதி நிறுவன ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.

சாதாரண விடுமுறை அல்லது ஊதியக் குறைப்பு இல்லாமல் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் ஊழியர்களுக்கு வாக்களிக்க உரிய விடுமுறை வழங்கப்படுவதில்லை என ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதனை கருத்திற்கொண்டு பொதுத்தேர்தலை முன்னிட்டு அனைத்து அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள், நிதி நிறுவன ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் அல்லது தனிப்பட்ட காராணங்களுக்கான விடுப்பு இழப்பு இன்றி வாக்களிக்கக்கூடிய வகையில் விடுமுறை வழங்குவதற்தான விதிமுறைகளை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய அரச அதிகாரிகளின் விசேட விடுமுறை குறித்த நிறுவனங்களின் குறியீடு அத்தியாயம் 12, பத்தி 12/3 இல் கூறப்பட்டுள்ளபடி, நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்வதற்கு தேவையான ஒரு தொடர்ச்சியான காலம் குறைந்தபட்சம் 4 மணிநேரம் என்றும், சம்பளம் பிடிப்பு இல்லாமல் விசேட விடுமுறை வழங்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்களுக்கு விசேட விடுமுறை - தேர்தல் ஆணையகத்தின் அறிவிப்பு  எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு அனைத்து அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள், நிதி நிறுவன ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.சாதாரண விடுமுறை அல்லது ஊதியக் குறைப்பு இல்லாமல் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.குறிப்பிட்ட சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் ஊழியர்களுக்கு வாக்களிக்க உரிய விடுமுறை வழங்கப்படுவதில்லை என ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.இதனை கருத்திற்கொண்டு பொதுத்தேர்தலை முன்னிட்டு அனைத்து அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள், நிதி நிறுவன ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் அல்லது தனிப்பட்ட காராணங்களுக்கான விடுப்பு இழப்பு இன்றி வாக்களிக்கக்கூடிய வகையில் விடுமுறை வழங்குவதற்தான விதிமுறைகளை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.அதற்கமைய அரச அதிகாரிகளின் விசேட விடுமுறை குறித்த நிறுவனங்களின் குறியீடு அத்தியாயம் 12, பத்தி 12/3 இல் கூறப்பட்டுள்ளபடி, நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்வதற்கு தேவையான ஒரு தொடர்ச்சியான காலம் குறைந்தபட்சம் 4 மணிநேரம் என்றும், சம்பளம் பிடிப்பு இல்லாமல் விசேட விடுமுறை வழங்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement