• May 29 2025

கிளிநொச்சியில் கடற்றொழிலாளரை தாக்கியதா கடற்படை - உண்மை என்ன? வெளிவரும் தகவல்கள்

Chithra / May 28th 2025, 4:09 pm
image


கடற்படையினர் தாக்கியதாக கிளிநொச்சியில் கடற்றொழிலாளர் ஒருவர் அண்மையில்  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் இதுதொடர்பான உண்மைத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இதுதொடர்பில் எமது செய்தியார் தெரிவிக்கையில்  

கடந்த 20 ஆம் திகதி சுண்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், கடற்கரை பகுதிக்கு கசிப்பை கொண்டு சென்ற நிலையில் கடற்படையினர் சுற்றிவளைத்து பிடிக்க முற்பட்ட போது  தப்பிக்க முயன்றுள்ளார். 

எனினும் கடற்படையினர் இவரை மடக்கிப்பிடித்து தர்மபுரம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

இந்நிலையில் அவரை கைது செய்த பொலிஸார் 20 லீட்டர் கசிப்புடன் இவரை நீதிமன்றத்தில் முற்படுத்தவிருந்த நிலையில் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அதன்பின்னரே, அதாவது 22 ஆம் திகதி  கடற்படை தன்னை தாக்கியதாக கூறி குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

இதன்போது பொலிஸார் சென்று வாக்குமூலம் கேட்டபோது, தான் கடற்றொழில் செய்வதாகவும் அடிக்கடி கடற்கரைப் பகுதிக்கு செல்வதாவும் முறைப்பாடு ஒன்றும் வேண்டாம் என கேட்ட நிலையில் தர்மபுரம் பொலிஸாரும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாது விட்டுள்ளனர். 

இச் சம்பவத்திற்கு பின்னரே முன்னாள் கரைச்சிப் பிரதேச சபையின் உறுப்பினர் சண்முகம் ஜீவராசா ஊடாக இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

ஆனால் குறித்த நபர் தான் கடற்படையினரால் தாக்கப்பட்டதாகக் கூறி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். 

கடற்றொழிலுக்குச் சென்ற தன்னை கடற்படையைச் சேர்ந்த சிலர் கடுமையாகத் தாக்கியதாகவும்

இந்த சம்பவம் தொடர்பான முறைப்பாட்டைத் தருமபுரம் பொலிஸார் ஏற்க மறுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்தநிலையில், கடந்த வருடம் விஸ்வமடு எரிபொருள் நிலையத்தில் குறித்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட போது அவர் கத்தியால் பொலிஸாரை வெட்டிவிட்டு ஓடியதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

கிளிநொச்சியில் கடற்றொழிலாளரை தாக்கியதா கடற்படை - உண்மை என்ன வெளிவரும் தகவல்கள் கடற்படையினர் தாக்கியதாக கிளிநொச்சியில் கடற்றொழிலாளர் ஒருவர் அண்மையில்  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் இதுதொடர்பான உண்மைத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.இதுதொடர்பில் எமது செய்தியார் தெரிவிக்கையில்  கடந்த 20 ஆம் திகதி சுண்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், கடற்கரை பகுதிக்கு கசிப்பை கொண்டு சென்ற நிலையில் கடற்படையினர் சுற்றிவளைத்து பிடிக்க முற்பட்ட போது  தப்பிக்க முயன்றுள்ளார். எனினும் கடற்படையினர் இவரை மடக்கிப்பிடித்து தர்மபுரம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில் அவரை கைது செய்த பொலிஸார் 20 லீட்டர் கசிப்புடன் இவரை நீதிமன்றத்தில் முற்படுத்தவிருந்த நிலையில் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.அதன்பின்னரே, அதாவது 22 ஆம் திகதி  கடற்படை தன்னை தாக்கியதாக கூறி குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன்போது பொலிஸார் சென்று வாக்குமூலம் கேட்டபோது, தான் கடற்றொழில் செய்வதாகவும் அடிக்கடி கடற்கரைப் பகுதிக்கு செல்வதாவும் முறைப்பாடு ஒன்றும் வேண்டாம் என கேட்ட நிலையில் தர்மபுரம் பொலிஸாரும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாது விட்டுள்ளனர். இச் சம்பவத்திற்கு பின்னரே முன்னாள் கரைச்சிப் பிரதேச சபையின் உறுப்பினர் சண்முகம் ஜீவராசா ஊடாக இந்த வீடியோ வெளியாகியுள்ளது.ஆனால் குறித்த நபர் தான் கடற்படையினரால் தாக்கப்பட்டதாகக் கூறி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். கடற்றொழிலுக்குச் சென்ற தன்னை கடற்படையைச் சேர்ந்த சிலர் கடுமையாகத் தாக்கியதாகவும்இந்த சம்பவம் தொடர்பான முறைப்பாட்டைத் தருமபுரம் பொலிஸார் ஏற்க மறுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், கடந்த வருடம் விஸ்வமடு எரிபொருள் நிலையத்தில் குறித்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட போது அவர் கத்தியால் பொலிஸாரை வெட்டிவிட்டு ஓடியதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement