• Jul 17 2025

பிரித்தானியர் வரைந்த காந்தியின் ஓவியம்; இணையவழி ஏலத்தில் 6 கோடி ரூபாவிற்கு விற்பனை!

shanuja / Jul 16th 2025, 4:37 pm
image

இணையவழி ஏலத்தில் முதல் முறையாக 6 கோடி ரூபாவிற்கு மகாத்மா காந்தியின் ஓவியம் விற்பனையாகியுள்ளமை அதிசயிக்க வைத்துள்ளது. 


லண்டன், போன்ஹாம்ஸில் இடம்பெற்ற இணையவழி ஏல விற்பனையிலே பிரித்தானியக் கலைஞரான கிளேர் லெய்டனால் (Clare Leighton) வரையப்பட்ட காந்தி 6 கோடி  ரூபாவிற்கு விற்பனையாகியுள்ளது. 

 

கடந்த 1931  ஆண்டில்  மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக மகாத்மா காந்தி, லண்டனுக்குச் சென்றுள்ளார். அதன்போது பிரித்தானியக் கலைஞரான கிளேர் லெய்டன் மகாத்மா காந்தியை சந்தித்துள்ளார். 

 

அப்போது மகாத்மா காந்தியை வரைவதற்கு பிரித்தானிய கலைஞர் அனுமதி கேட்டுள்ளார். அதன்பின்னர் தம்மை ஓவியமாக தீட்டுவதற்கு காந்தி இணங்கியுள்ளார். 

 

இதுவே, தன் வாழ்நாளில் ஒரு ஓவியருக்கு, ஓவியம் வரைவதற்கு மகாத்மா காந்தி வழங்கிய சந்தர்ப்பம் எனக் கருதப்படுகின்றது. இறுதியில் மகாத்மா காந்தியின் உருவத்தை கிளேர் லெய்டன் ஓவியமாகத் தீட்டினார். 


அந்த ஓவியம் ஒன்றே  இணையவழி ஏலத்தில் 6 கோடி ரூபாவிற்கு மேல் விற்கப்பட்டது. இணையவழி ஏலத்தில்  முதல் முறை விற்கப்பட்ட ஓவியம்  காந்தியின் ஓவியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் மூன்று மடங்கிற்கு விற்பனை செய்யப்பட்ட காந்தியின் ஓவியம் இணையவழி ஏல விற்பனையில்  முதலிடத்தைப் பிடித்துள்ளது. இது அனைவரிடத்திலும் ஓர் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியர் வரைந்த காந்தியின் ஓவியம்; இணையவழி ஏலத்தில் 6 கோடி ரூபாவிற்கு விற்பனை இணையவழி ஏலத்தில் முதல் முறையாக 6 கோடி ரூபாவிற்கு மகாத்மா காந்தியின் ஓவியம் விற்பனையாகியுள்ளமை அதிசயிக்க வைத்துள்ளது. லண்டன், போன்ஹாம்ஸில் இடம்பெற்ற இணையவழி ஏல விற்பனையிலே பிரித்தானியக் கலைஞரான கிளேர் லெய்டனால் (Clare Leighton) வரையப்பட்ட காந்தி 6 கோடி  ரூபாவிற்கு விற்பனையாகியுள்ளது.  கடந்த 1931  ஆண்டில்  மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக மகாத்மா காந்தி, லண்டனுக்குச் சென்றுள்ளார். அதன்போது பிரித்தானியக் கலைஞரான கிளேர் லெய்டன் மகாத்மா காந்தியை சந்தித்துள்ளார்.  அப்போது மகாத்மா காந்தியை வரைவதற்கு பிரித்தானிய கலைஞர் அனுமதி கேட்டுள்ளார். அதன்பின்னர் தம்மை ஓவியமாக தீட்டுவதற்கு காந்தி இணங்கியுள்ளார்.  இதுவே, தன் வாழ்நாளில் ஒரு ஓவியருக்கு, ஓவியம் வரைவதற்கு மகாத்மா காந்தி வழங்கிய சந்தர்ப்பம் எனக் கருதப்படுகின்றது. இறுதியில் மகாத்மா காந்தியின் உருவத்தை கிளேர் லெய்டன் ஓவியமாகத் தீட்டினார். அந்த ஓவியம் ஒன்றே  இணையவழி ஏலத்தில் 6 கோடி ரூபாவிற்கு மேல் விற்கப்பட்டது. இணையவழி ஏலத்தில்  முதல் முறை விற்கப்பட்ட ஓவியம்  காந்தியின் ஓவியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் மூன்று மடங்கிற்கு விற்பனை செய்யப்பட்ட காந்தியின் ஓவியம் இணையவழி ஏல விற்பனையில்  முதலிடத்தைப் பிடித்துள்ளது. இது அனைவரிடத்திலும் ஓர் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement