எரிபொருள் இல்லாமல் மின்சாரத்தில் இயங்கும் விமானம் ஒன்று வெற்றிகரமாக தனது முதல் பயணத்தை ஆரம்பித்து சாதனை படைத்துள்ளது.
உலகிலேயே முதன்முதலாக முழுக்க முழுக்க மின்சாரத்தால் இயங்கக்கூடிய பயணிகள் விமானத்தை ஆலியா சி.எஸ் 300 என்ற பெயரில் அமெரிக்காவைச் சேர்ந்த பீட்டா ரெக்னோலிஜி நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த விமானம் அண்மையில் அமரிக்காவின் ஈஸ்ற்காம்டன்ட் பகுதியிலிருந்து நியூயோர்க்கின் ஜான் எவ் கென்னடி விமான நிலையத்திற்கு வெற்றிகரமாக சென்றடைந்தது. 130 கிலோமீற்றர் தூரத்துக்குப் பற்நத இந்த விமானத்திற்கு பற்றி சார்ஜ் ஏற்றுவதற்கான செலவு ,இலங்கைத் தொகையில் 2500 ரூபா (8 அமெரிக்க டொலர் ) மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக ஹெலிகொப்டர் மூலம் இந்த தூரத்திற்குச் சென்றால் கிட்டத்தட்ட இலங்கைத் தொகையில் 41 ஆயிரத்து 655 ரூபா (160 அமெரிக்க டொலர்கள்) செலவாகும். ஆனால் இந்த விமானத்தில் இலங்கைத் தொகையில் வெறும் 2500 ரூபா மட்டுமே செலவாகியுள்ளது. இந்தப் பயணத்தில் விமானத்தில் நான்கு பயணிகள் மட்டும் பயணித்தனர். மேலும் இதில் பயணிக்கும் போது விமான என்ஜினின் புறொப்பரில் சத்தமே இல்லை என்று பயணிகள் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.
இது குறித்து பீட்டா ரெக்னோலிஜி நிறுவனத்தின் தலைவரும் செயல் அதிகாரியுமான கைக்கிளாக் தெரிவிக்கையில்,
இது 100 சதவீதம் மின்சார விமானமாகும். தற்போது தான் ஈஸ்ற்காம்டனிலிருந்து ஜே.எப்.கே விமான நிலையத்திற்கு வெற்றிகரமாகப் பறந்துள்ளது. மேலும் இதற்குக் குறைந்த அளவே செலவாகிறது.- என்றார்.
2017 இல் ஆரம்பிக்கப்பட்ட பீட்டா ரெக்னோலொஜி நிறுவனம் சி.எக்ஸ் 100 மற்றும் ஏலியா 250 ஈவோற்றல் மொடல் விமானங்களை உருவாக்கும் பணியில் கடந்த 6 ஆண்டுகளாக ஈடுபட்டது. விரைவில் அமெரிக்காவின் பெரடல் ஏவியேஷன் நிர்வாகத்திடமிருந்து சான்றிதழை பீட்டா ரெக்னோலொஜி பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருமுறை இந்த விமானத்தை சார்ஜ் செய்யும் போது 250 நாட்டிக்கல் மைல் தூரத்திற்கு அதாவது கிட்டத்தட்ட 450 கிலோமீற்றர் பறக்கமுடியும். இந்த விமானங்கள் நகரங்கள் மற்றும் புறநகரங்களுக்கு இடையே சிறிய தூர பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே அசாதாரண சூழ்நிலைகளில் விமான விபத்துக்கள் ஏற்படும் பொழுது அதன் எரிபொருள்களால் விமானம் தீப்பிடித்து வெடித்து சிதறுவது தற்போது அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற பற்றியில் இயங்கும் விமானங்கள் உருவாகியுள்ளமை விபத்துக்களின் போது உயிர்சேதங்களை தவிர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
https://web.facebook.com/share/v/1CMCd7ipaX/
8 டொலரில் மின்சாரத்தில் இயங்கும் அமெரிக்க விமானம் - வெற்றிகரமாக பயணித்து உலகளவில் சாதனை எரிபொருள் இல்லாமல் மின்சாரத்தில் இயங்கும் விமானம் ஒன்று வெற்றிகரமாக தனது முதல் பயணத்தை ஆரம்பித்து சாதனை படைத்துள்ளது. உலகிலேயே முதன்முதலாக முழுக்க முழுக்க மின்சாரத்தால் இயங்கக்கூடிய பயணிகள் விமானத்தை ஆலியா சி.எஸ் 300 என்ற பெயரில் அமெரிக்காவைச் சேர்ந்த பீட்டா ரெக்னோலிஜி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த விமானம் அண்மையில் அமரிக்காவின் ஈஸ்ற்காம்டன்ட் பகுதியிலிருந்து நியூயோர்க்கின் ஜான் எவ் கென்னடி விமான நிலையத்திற்கு வெற்றிகரமாக சென்றடைந்தது. 130 கிலோமீற்றர் தூரத்துக்குப் பற்நத இந்த விமானத்திற்கு பற்றி சார்ஜ் ஏற்றுவதற்கான செலவு ,இலங்கைத் தொகையில் 2500 ரூபா (8 அமெரிக்க டொலர் ) மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக ஹெலிகொப்டர் மூலம் இந்த தூரத்திற்குச் சென்றால் கிட்டத்தட்ட இலங்கைத் தொகையில் 41 ஆயிரத்து 655 ரூபா (160 அமெரிக்க டொலர்கள்) செலவாகும். ஆனால் இந்த விமானத்தில் இலங்கைத் தொகையில் வெறும் 2500 ரூபா மட்டுமே செலவாகியுள்ளது. இந்தப் பயணத்தில் விமானத்தில் நான்கு பயணிகள் மட்டும் பயணித்தனர். மேலும் இதில் பயணிக்கும் போது விமான என்ஜினின் புறொப்பரில் சத்தமே இல்லை என்று பயணிகள் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.இது குறித்து பீட்டா ரெக்னோலிஜி நிறுவனத்தின் தலைவரும் செயல் அதிகாரியுமான கைக்கிளாக் தெரிவிக்கையில், இது 100 சதவீதம் மின்சார விமானமாகும். தற்போது தான் ஈஸ்ற்காம்டனிலிருந்து ஜே.எப்.கே விமான நிலையத்திற்கு வெற்றிகரமாகப் பறந்துள்ளது. மேலும் இதற்குக் குறைந்த அளவே செலவாகிறது.- என்றார். 2017 இல் ஆரம்பிக்கப்பட்ட பீட்டா ரெக்னோலொஜி நிறுவனம் சி.எக்ஸ் 100 மற்றும் ஏலியா 250 ஈவோற்றல் மொடல் விமானங்களை உருவாக்கும் பணியில் கடந்த 6 ஆண்டுகளாக ஈடுபட்டது. விரைவில் அமெரிக்காவின் பெரடல் ஏவியேஷன் நிர்வாகத்திடமிருந்து சான்றிதழை பீட்டா ரெக்னோலொஜி பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருமுறை இந்த விமானத்தை சார்ஜ் செய்யும் போது 250 நாட்டிக்கல் மைல் தூரத்திற்கு அதாவது கிட்டத்தட்ட 450 கிலோமீற்றர் பறக்கமுடியும். இந்த விமானங்கள் நகரங்கள் மற்றும் புறநகரங்களுக்கு இடையே சிறிய தூர பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே அசாதாரண சூழ்நிலைகளில் விமான விபத்துக்கள் ஏற்படும் பொழுது அதன் எரிபொருள்களால் விமானம் தீப்பிடித்து வெடித்து சிதறுவது தற்போது அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற பற்றியில் இயங்கும் விமானங்கள் உருவாகியுள்ளமை விபத்துக்களின் போது உயிர்சேதங்களை தவிர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.https://web.facebook.com/share/v/1CMCd7ipaX/