மூதூர் பாட்டாளிபுரம் இளைஞர் வள நிலையத்தின் ஏற்பாட்டிலும் மூதூர் வலயக் கல்வி அலுவலம்,மூதூர் பிரதேச செயலகம் என்பவற்றின் அனுசரணையில் 15 ஆவது கலை இலக்கியப் பண்பாட்டு விழாவும் இன்று(26) மூதூர் பாட்டாளிபுரத்தில் நடைபெற்றது.
இதன்போது பாரம்பரிய முறைப்படி ஊர்வலமாக மடைப்பெட்டி எடுத்துவரும் சமய நிகழ்வும்,சாமி ஆட்டம், சாமி மறித்து மந்திரத்தால் கட்டுப்படுத்தல் குறிப்பாக தமிழர் பண்பாட்டுக் கலையான சிலம்பம் விளையாட்டும் இடம்பெற்றன.
அத்தோடு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதோடு கலைஞர் கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
மூதூர் பாட்டாளிபுரம் இளைஞர் வள நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, இளைஞர் வள நிலைய பிரதான செயற்பாட்டாளர் சச்சிவானந்தம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அரச உத்தியோகத்தர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள் ,பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் பங்கு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூதூரில் களைகட்டிய கலை இலக்கியப் பண்பாட்டு விழா. மூதூர் பாட்டாளிபுரம் இளைஞர் வள நிலையத்தின் ஏற்பாட்டிலும் மூதூர் வலயக் கல்வி அலுவலம்,மூதூர் பிரதேச செயலகம் என்பவற்றின் அனுசரணையில் 15 ஆவது கலை இலக்கியப் பண்பாட்டு விழாவும் இன்று(26) மூதூர் பாட்டாளிபுரத்தில் நடைபெற்றது.இதன்போது பாரம்பரிய முறைப்படி ஊர்வலமாக மடைப்பெட்டி எடுத்துவரும் சமய நிகழ்வும்,சாமி ஆட்டம், சாமி மறித்து மந்திரத்தால் கட்டுப்படுத்தல் குறிப்பாக தமிழர் பண்பாட்டுக் கலையான சிலம்பம் விளையாட்டும் இடம்பெற்றன.அத்தோடு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதோடு கலைஞர் கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.மூதூர் பாட்டாளிபுரம் இளைஞர் வள நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, இளைஞர் வள நிலைய பிரதான செயற்பாட்டாளர் சச்சிவானந்தம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அரச உத்தியோகத்தர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள் ,பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் பங்கு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.