• Jul 05 2025

அதிவேகமாக செலுத்திவந்த மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி விபத்து; சிறுவன் பலி

Chithra / Jul 4th 2025, 11:17 am
image


அதிவேகமாக செலுத்திவந்த மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதியதால் சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக  உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடியை சேர்ந்த 17 வயதான முஹம்மட் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று அதிகாலை  இந்த விபத்து  இடம்பெற்றுள்ளது.

அதிவேகமாக செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள், பாதையை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியுள்ளது. 

இதில் படுகாயமடைந்த சிறுவன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

அவரது சடலம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.  


அதிவேகமாக செலுத்திவந்த மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி விபத்து; சிறுவன் பலி அதிவேகமாக செலுத்திவந்த மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதியதால் சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக  உயிரிழந்துள்ளார்.காத்தான்குடியை சேர்ந்த 17 வயதான முஹம்மட் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று அதிகாலை  இந்த விபத்து  இடம்பெற்றுள்ளது.அதிவேகமாக செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள், பாதையை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுவன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது சடலம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.  

Advertisement

Advertisement

Advertisement