• Jul 18 2025

மேலாடை இன்றி வீதியில் திரிந்தது ஆணா! பெண்ணா! -வெடித்த புதிய சர்ச்சை!

Thansita / Jul 17th 2025, 9:29 pm
image

அம்பாறை, பொத்துவில் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற குற்றத்திற்காக, சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பெண்ணா அல்லது ஆணா என்பது குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 26 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து மற்றுமொரு ஹோட்டலுக்கு கடந்த திங்கட்கிழமை பிற்பகல் மேலாடை இன்றி நிர்வாணமாக நடந்து சென்ற நிலையில் பொத்துவில் பொலிஸ் மகளிர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர்,

அவருக்கு எதிராக 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வாரங்கள் மற்றும் ஒருமாத சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி, பெண்ணா அல்லது ஆணா என சமூக ஊடகங்களில் தற்போது பல கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறன.

ஏனென்றால் இந்த சுற்றுலாப் பயணியின் கடவுச்சீட்டில் பாலினம் ஆண் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் இந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பெண்ணா அல்லது ஆணா என பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. 

இதன் காரணமாக நீதிமன்ற தீர்ப்பு குறித்து சமூக ஊடகங்களில் பல எதிர்மறை கருத்துக்களும் பகிரப்பட்டு வருகின்றன.

இலங்கை சட்டம் தற்போது ஆண்-பெண் இருமைக்கு அப்பாற்பட்ட பாலின அடையாளங்களை அங்கீகரிக்கவில்லை.

மேலும் ஆண்கள் மேற் சட்டை அணியாமல் நடந்து கொள்வதை குற்றமாகக் கருதவில்லை. 

எனவே, நீதிமன்றத்தின் தீர்ப்பு, வெளிநாட்டு குடிமக்கள், குறிப்பாக திருநங்கைகள் சம்பந்தப்பட்ட சட்ட நடவடிக்கைகளில் பாலினம் எவ்வாறு விளக்கப்படுகிறது என்பது குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.

மேலாடை இன்றி வீதியில் திரிந்தது ஆணா பெண்ணா -வெடித்த புதிய சர்ச்சை அம்பாறை, பொத்துவில் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற குற்றத்திற்காக, சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பெண்ணா அல்லது ஆணா என்பது குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் சர்ச்சையை எழுப்பியுள்ளது.தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 26 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து மற்றுமொரு ஹோட்டலுக்கு கடந்த திங்கட்கிழமை பிற்பகல் மேலாடை இன்றி நிர்வாணமாக நடந்து சென்ற நிலையில் பொத்துவில் பொலிஸ் மகளிர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர்,அவருக்கு எதிராக 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வாரங்கள் மற்றும் ஒருமாத சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி, பெண்ணா அல்லது ஆணா என சமூக ஊடகங்களில் தற்போது பல கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறன.ஏனென்றால் இந்த சுற்றுலாப் பயணியின் கடவுச்சீட்டில் பாலினம் ஆண் என குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால் இந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பெண்ணா அல்லது ஆணா என பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இதன் காரணமாக நீதிமன்ற தீர்ப்பு குறித்து சமூக ஊடகங்களில் பல எதிர்மறை கருத்துக்களும் பகிரப்பட்டு வருகின்றன.இலங்கை சட்டம் தற்போது ஆண்-பெண் இருமைக்கு அப்பாற்பட்ட பாலின அடையாளங்களை அங்கீகரிக்கவில்லை.மேலும் ஆண்கள் மேற் சட்டை அணியாமல் நடந்து கொள்வதை குற்றமாகக் கருதவில்லை. எனவே, நீதிமன்றத்தின் தீர்ப்பு, வெளிநாட்டு குடிமக்கள், குறிப்பாக திருநங்கைகள் சம்பந்தப்பட்ட சட்ட நடவடிக்கைகளில் பாலினம் எவ்வாறு விளக்கப்படுகிறது என்பது குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement