ஆலயமொன்றின் கூரையைப் பிரித்து ஐம்பொன் விக்கிரகம் ஒன்று திருட்டுப் போயுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு நாச்சிமார் ஆலயத்தில் இருந்த ஐம்பொன் எழுந்தருளி விக்கிரகம் ஒன்றே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத திருட்டுக் கும்பலொன்று நேற்று (3) குறித்த ஆலயத்தின் கூரையைப் பிரித்து உள்ளே நுழைந்து விக்கிரகத்தை திருடிச் சென்றுள்ளனர். குறித்த விக்கிரகத்தின் பெறுமதி சுமார் 10 இலட்சம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
விக்கிரகம் திருடப்பட்டது தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டுக்கமைய மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நவாலி நாச்சிமார் ஆலயத்தில் 10 லட்சம் பெறுமதியான ஐம்பொன் விக்கிரகம் திருட்டு ஆலயமொன்றின் கூரையைப் பிரித்து ஐம்பொன் விக்கிரகம் ஒன்று திருட்டுப் போயுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு நாச்சிமார் ஆலயத்தில் இருந்த ஐம்பொன் எழுந்தருளி விக்கிரகம் ஒன்றே இவ்வாறு திருடப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத திருட்டுக் கும்பலொன்று நேற்று (3) குறித்த ஆலயத்தின் கூரையைப் பிரித்து உள்ளே நுழைந்து விக்கிரகத்தை திருடிச் சென்றுள்ளனர். குறித்த விக்கிரகத்தின் பெறுமதி சுமார் 10 இலட்சம் எனத் தெரிவிக்கப்படுகிறது.விக்கிரகம் திருடப்பட்டது தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டுக்கமைய மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.