• Jul 17 2025

மசாஜ் நிலையத்தில் விபச்சார விடுதி - உரிமையாளர் உட்பட 6 பெண்கள் கைது!

shanuja / Jul 17th 2025, 12:35 pm
image

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதியில் உரிமையாளர் உட்பட ஆறு பெண்கள்  நேற்று  (16) கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


கொழும்பு - கல்கிஸ்ஸை பிரதேசத்தில் இயங்கி வந்த மசாஜ் நிலையத்திலேயே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 


கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த பகுதியில்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்  ஆறு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மசாஜ் நிலையம் என்ற பேரில் விபச்சார விடுதி ஒன்றை உரிமையாளரான பெண் ஒருவர் நடத்தி வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனையடுத்து 

மசாஜ் நிலையத்தின் பெண் உரிமையாளர் உட்பட அங்கிருந்த ஆறு பெண்கள் கைது செய்யப்பட்டனர். 


கைது செய்யப்பட்ட  பெண்கள் கடவத்தை, கஹடகஸ்திகிலிய, கொடகவெல, அக்மீமன, மெதிரிகிரிய மற்றும் மினுவாங்கொடை பகுதிகளைச் சேர்நத 38 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மசாஜ் நிலையத்தில் விபச்சார விடுதி - உரிமையாளர் உட்பட 6 பெண்கள் கைது மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதியில் உரிமையாளர் உட்பட ஆறு பெண்கள்  நேற்று  (16) கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு - கல்கிஸ்ஸை பிரதேசத்தில் இயங்கி வந்த மசாஜ் நிலையத்திலேயே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த பகுதியில்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்  ஆறு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மசாஜ் நிலையம் என்ற பேரில் விபச்சார விடுதி ஒன்றை உரிமையாளரான பெண் ஒருவர் நடத்தி வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனையடுத்து மசாஜ் நிலையத்தின் பெண் உரிமையாளர் உட்பட அங்கிருந்த ஆறு பெண்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட  பெண்கள் கடவத்தை, கஹடகஸ்திகிலிய, கொடகவெல, அக்மீமன, மெதிரிகிரிய மற்றும் மினுவாங்கொடை பகுதிகளைச் சேர்நத 38 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement