• Jul 10 2025

6 நாட்களில் 36 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை!

Chithra / Jul 10th 2025, 1:24 pm
image

 

2025 ஜூலை மாதத்தின் முதல் ஆறு நாட்களில் 36,002 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

இதன்படி, இந்த ஆண்டு இதுவரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை  120,446  ஆக உள்ளது. 

ஜூலை மாதத்தின் முதல் 6 நாட்களில் இந்தியாவில் இருந்து 8,053 பயணிகள் வந்துள்ளதுடன், அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்ததுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்திலிருந்து 3,562 சுற்றுலாப் பயணிகள், அவுஸ்திரேலியாவிலிருந்து 2,674 பேர் மற்றும் சீனாவிலிருந்து 2,362 பேர் நாட்டிற்கு வந்துள்ளனர்.


6 நாட்களில் 36 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை  2025 ஜூலை மாதத்தின் முதல் ஆறு நாட்களில் 36,002 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த ஆண்டு இதுவரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை  120,446  ஆக உள்ளது. ஜூலை மாதத்தின் முதல் 6 நாட்களில் இந்தியாவில் இருந்து 8,053 பயணிகள் வந்துள்ளதுடன், அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்ததுள்ளனர்.அதனைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்திலிருந்து 3,562 சுற்றுலாப் பயணிகள், அவுஸ்திரேலியாவிலிருந்து 2,674 பேர் மற்றும் சீனாவிலிருந்து 2,362 பேர் நாட்டிற்கு வந்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement