• Jul 05 2025

323 கொள்கலன் விவகாரம்: அமைச்சர் பிமல் பதவி விலக வேண்டும்! மொட்டு கட்சி வலியுறுத்து

Chithra / Jul 5th 2025, 1:00 pm
image

 

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பதவி விலக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்  முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார். 

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

துறைமுகத்தில் இருந்து பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. 

அவற்றில் ஆயுதங்களே வந்தன என்று நாடாளுமன்ற உறுப்பினர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

கொள்கலன் விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு குழுவொன்று நியமிக்கப்பட்டது.

விசாரணையின்றி அவை விடுவிக்கப்பட்டமை தவறு என அந்த குழு கண்டறிந்துள்ளது.

323 கொள்கலன்களில் என்ன இருந்தன என்பதை துறைக்கு பொறுப்பான அமைச்சர் வெளிப்படுத்த வேண்டும். அதுமட்டுமல்ல அமைச்சர் பிமல் ரத்நாயக்க அல்லது பிரதி அமைச்சர் பதவி விலக வேண்டும். – என்றார்.

323 கொள்கலன் விவகாரம்: அமைச்சர் பிமல் பதவி விலக வேண்டும் மொட்டு கட்சி வலியுறுத்து  போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பதவி விலக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்  முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.துறைமுகத்தில் இருந்து பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஆயுதங்களே வந்தன என்று நாடாளுமன்ற உறுப்பினர் தகவல் வெளியிட்டுள்ளார்.இது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னகொள்கலன் விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு குழுவொன்று நியமிக்கப்பட்டது.விசாரணையின்றி அவை விடுவிக்கப்பட்டமை தவறு என அந்த குழு கண்டறிந்துள்ளது.323 கொள்கலன்களில் என்ன இருந்தன என்பதை துறைக்கு பொறுப்பான அமைச்சர் வெளிப்படுத்த வேண்டும். அதுமட்டுமல்ல அமைச்சர் பிமல் ரத்நாயக்க அல்லது பிரதி அமைச்சர் பதவி விலக வேண்டும். – என்றார்.

Advertisement

Advertisement

Advertisement