பங்களாதேஷ் அணிக்கு எதிரான இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி தோல்வியடைவதற்கு துடுப்பாட்டத்தில் காணப்பட்ட பலவீனங்களே காரணம் என்று இலங்கை அணியின் தலைவர் சரித் அசலங்க தெரிவித்துள்ளார்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில், பங்களாதேஷ் அணி 83 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இந்த நிலையிலேயே, அணியின் தோல்வி குறித்து இலங்கை அணியின் தலைவர் சரித் அசலங்க ஊடகங்களுக்கு இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நெருங்கும் நிலையில், இந்த நிலைமையானது பெரும் சவாலுக்குரியது.
இதற்கமைய அணியின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு அனைவரும் முயற்சித்து வருவதாகவும் சரித் அசலங்க தெரிவித்துள்ளார்.
20-20 சர்வதேச கிரிக்கெட் தொடர் - இலங்கையின் தோல்விக்கு பலவீனங்களே காரணம் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி தோல்வியடைவதற்கு துடுப்பாட்டத்தில் காணப்பட்ட பலவீனங்களே காரணம் என்று இலங்கை அணியின் தலைவர் சரித் அசலங்க தெரிவித்துள்ளார். இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில், பங்களாதேஷ் அணி 83 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்த நிலையிலேயே, அணியின் தோல்வி குறித்து இலங்கை அணியின் தலைவர் சரித் அசலங்க ஊடகங்களுக்கு இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நெருங்கும் நிலையில், இந்த நிலைமையானது பெரும் சவாலுக்குரியது. இதற்கமைய அணியின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு அனைவரும் முயற்சித்து வருவதாகவும் சரித் அசலங்க தெரிவித்துள்ளார்.