• Jul 24 2025

காதலியை வெட்டிக் கொன்று தன்னுயிரை மாய்த்த இளைஞன்; காதலியின் பெற்றோர் மீதும் தாக்குதல்

Chithra / Jul 23rd 2025, 8:19 am
image


அம்பாறையில் இளம் பெண்ணொருவர் இன்று அதிகாலை அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை  செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.  

மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு பிரவேசித்த இளைஞன், இளம் பெண்ணின் தாய் மற்றும் தந்தை மீதும் வெட்டுக்காயங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது. 

கொலை செய்யப்பட்டவர், பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த  23 வயதான சரோஜா உதயங்கனி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த தாயும் தந்தையும் மஹா ஓயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொலையைச் செய்த இளைஞன் மொனராகலை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 

சம்பவம் குறித்து பதியதலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


காதலியை வெட்டிக் கொன்று தன்னுயிரை மாய்த்த இளைஞன்; காதலியின் பெற்றோர் மீதும் தாக்குதல் அம்பாறையில் இளம் பெண்ணொருவர் இன்று அதிகாலை அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை  செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.  மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு பிரவேசித்த இளைஞன், இளம் பெண்ணின் தாய் மற்றும் தந்தை மீதும் வெட்டுக்காயங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது. கொலை செய்யப்பட்டவர், பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த  23 வயதான சரோஜா உதயங்கனி என அடையாளம் காணப்பட்டுள்ளது.சம்பவத்தில் காயமடைந்த தாயும் தந்தையும் மஹா ஓயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொலையைச் செய்த இளைஞன் மொனராகலை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து பதியதலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement