• Aug 08 2025

குளவி கொட்டுக்கு இலக்கான நபர்; மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழப்பு!

shanuja / Aug 8th 2025, 3:47 pm
image

பம்பர குளவி கொட்டுக்கு இலக்கான நபர்  மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். 


இந்தச் சம்பவம் மஸ்கெலியா ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. 


குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர்  ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவைச் சேர்ந்த சிவா கணகரட்னம் (வயது -36)  என்பவராவார். சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், 


குறித்த நபர் இன்று மதியம் தான் வளர்க்கும் பசுவிற்கு புல்வெட்டி கொண்டு குடிநீர் குழாய் செப்பனிட சென்றுள்ளார். அதன்போது அதி  விஷமுள்ள பம்பர குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார். 


அதன்பின்னர் அங்குள்ளவர்கள் அவரை மீட்டு  டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். 


அவரது சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. 


இது  தொடர்பான விசாரணைகளை  மஸ்கெலியா பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

குளவி கொட்டுக்கு இலக்கான நபர்; மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழப்பு பம்பர குளவி கொட்டுக்கு இலக்கான நபர்  மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் மஸ்கெலியா ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர்  ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவைச் சேர்ந்த சிவா கணகரட்னம் (வயது -36)  என்பவராவார். சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், குறித்த நபர் இன்று மதியம் தான் வளர்க்கும் பசுவிற்கு புல்வெட்டி கொண்டு குடிநீர் குழாய் செப்பனிட சென்றுள்ளார். அதன்போது அதி  விஷமுள்ள பம்பர குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார். அதன்பின்னர் அங்குள்ளவர்கள் அவரை மீட்டு  டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது  தொடர்பான விசாரணைகளை  மஸ்கெலியா பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement