• Aug 08 2025

கூட்டம் கூட்டமாக வந்த காட்டு யானைகள்; பெரும் பதற்றத்தில் மட்டக்களப்பு மக்கள்..!

Chithra / Aug 8th 2025, 4:20 pm
image



மட்டக்களப்பு - சித்தாண்டி பகுதியில் பட்டி பட்டியாக, வயல் வெளிகளில் காட்டு யானைகள் கூட்டம்  சுற்றித்திரிவதால் மக்கள் அச்சத்தில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. 

நேற்றைய தினம் பிற்பகல் வேளையில் இக்காட்டு யானைகள் கூட்டத்தை அவதானிக்க முடிந்ததாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

இம் மாதம் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் வயல் வெளிகளில் காட்டு யானைகள் கூட்டம்  கூட்டமாக சுற்றி திரிவதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாக தெரியவருகின்றது.

கூட்டம் கூட்டமாக வந்த காட்டு யானைகள்; பெரும் பதற்றத்தில் மட்டக்களப்பு மக்கள். மட்டக்களப்பு - சித்தாண்டி பகுதியில் பட்டி பட்டியாக, வயல் வெளிகளில் காட்டு யானைகள் கூட்டம்  சுற்றித்திரிவதால் மக்கள் அச்சத்தில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் பிற்பகல் வேளையில் இக்காட்டு யானைகள் கூட்டத்தை அவதானிக்க முடிந்ததாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இம் மாதம் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வயல் வெளிகளில் காட்டு யானைகள் கூட்டம்  கூட்டமாக சுற்றி திரிவதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாக தெரியவருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement