நுவரெலியா நகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு மற்றும் பகல் வேளைகளில் கண்காணிப்பின்றி நடமாடும் மட்டக்குதிரைகளை மாநகசபை பணியாளர்கள் மூலம் பிடித்து அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனையும் மீறி பிரதான வீதிகளில் திரியவிட்டால் அபராதம் விதிப்பதுடன் மட்டக்குதிரைகளை பொது ஏலத்தில் விடப்படும் என மாநகர சபை முதல்வர் உபாலி வனிகசேகர தெரிவித்தார்.
நுவரெலியாவில் பிரதான வீதிகளை ஆக்கிரமித்து விபத்துகளை ஏற்படுத்தும் மட்டக்குதிரைகளை பிடித்து அகற்ற வேண்டும் என மாநகரசபைக்கு கிடைத்த முறைபாடுகளுக்கு அமைய இதுவரை 15 இற்கும் மேற்பட்ட மட்டக்குதிரைகளை பணியாளர்கள் மூலம் பிடித்துள்ளோம்.
அதனை மாநகரசபைக்கு சொந்தமான இடத்தில் பாதுகாப்பாக கட்டப்பட்டு பராமரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதனை தேடி உரிமையாளர்கள் வருகைத்தரும் சந்தர்ப்பங்களில் மட்டக்குதிரையின் அடையாளத்தினை உறுதிப்படுத்தியபின் நகரில் அல்லது பிரதான வீதிகளில் மட்டக்குதிரைகளை இனி திரியவிடக் கூடாது என அறிவுறுத்தி, அபராதம் வசூலிக்கப்பட்டு ஒப்படைக்கப்படும்.
அதன்படி மட்டக்குதிரை பிடி கூலி, தண்டப்பணம், நாள் ஒன்றிற்கான பராமரிப்புக் கட்டணம் என்பவற்றை செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
வீதிகளை ஆக்கிரமித்து விபத்துகளை ஏற்படுத்தும் மட்டக்குதிரைகள் - உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நுவரெலியா நகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு மற்றும் பகல் வேளைகளில் கண்காணிப்பின்றி நடமாடும் மட்டக்குதிரைகளை மாநகசபை பணியாளர்கள் மூலம் பிடித்து அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதனையும் மீறி பிரதான வீதிகளில் திரியவிட்டால் அபராதம் விதிப்பதுடன் மட்டக்குதிரைகளை பொது ஏலத்தில் விடப்படும் என மாநகர சபை முதல்வர் உபாலி வனிகசேகர தெரிவித்தார்.நுவரெலியாவில் பிரதான வீதிகளை ஆக்கிரமித்து விபத்துகளை ஏற்படுத்தும் மட்டக்குதிரைகளை பிடித்து அகற்ற வேண்டும் என மாநகரசபைக்கு கிடைத்த முறைபாடுகளுக்கு அமைய இதுவரை 15 இற்கும் மேற்பட்ட மட்டக்குதிரைகளை பணியாளர்கள் மூலம் பிடித்துள்ளோம்.அதனை மாநகரசபைக்கு சொந்தமான இடத்தில் பாதுகாப்பாக கட்டப்பட்டு பராமரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.அதனை தேடி உரிமையாளர்கள் வருகைத்தரும் சந்தர்ப்பங்களில் மட்டக்குதிரையின் அடையாளத்தினை உறுதிப்படுத்தியபின் நகரில் அல்லது பிரதான வீதிகளில் மட்டக்குதிரைகளை இனி திரியவிடக் கூடாது என அறிவுறுத்தி, அபராதம் வசூலிக்கப்பட்டு ஒப்படைக்கப்படும்.அதன்படி மட்டக்குதிரை பிடி கூலி, தண்டப்பணம், நாள் ஒன்றிற்கான பராமரிப்புக் கட்டணம் என்பவற்றை செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.