பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் வர்த்தகம் தொடர்பான எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 30 அன்று, டொனால்ட் ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அறிவித்தார்.
மேலும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் ஆயுதங்களை இறக்குமதி செய்தால் கூடுதல் வரி விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
அதன்படி கடந்த இரு தினங்களுக்கு முன்பு, இந்தியா மீது மேலும் 25 சதவீதம் கூடுதல் வரிகளை விதிக்கும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
இதன்மூலம், அமெரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கான மொத்த வரி விதிப்பு 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப்பிடம், 50 சதவீத வரிவிதிப்புக்குப் பிறகு இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுமா என்று கேட்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த ட்ரம்ப், “சிக்கல்கள் தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் எதுவும் இல்லை” என்று தெரிவித்தார்.
இந்தியாவுடன் எதுவித வர்த்தகப் பேச்சுவார்த்தையும் இல்லை - ட்ரம்ப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் வர்த்தகம் தொடர்பான எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 30 அன்று, டொனால்ட் ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அறிவித்தார். மேலும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் ஆயுதங்களை இறக்குமதி செய்தால் கூடுதல் வரி விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார். அதன்படி கடந்த இரு தினங்களுக்கு முன்பு, இந்தியா மீது மேலும் 25 சதவீதம் கூடுதல் வரிகளை விதிக்கும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். இதன்மூலம், அமெரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கான மொத்த வரி விதிப்பு 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப்பிடம், 50 சதவீத வரிவிதிப்புக்குப் பிறகு இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுமா என்று கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த ட்ரம்ப், “சிக்கல்கள் தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் எதுவும் இல்லை” என்று தெரிவித்தார்.