• Aug 08 2025

அரேபிய சிறுவனின் சாதனையை முறியடித்த இலங்கை சிறுவன்; நீச்சல் போட்டியில் 6 வயது சிறுவன் புதிய சாதனை

Chithra / Aug 8th 2025, 11:48 am
image


கொழும்பு சென் பெனடிக்ட் கல்லூரியின் தரம் இரண்டை சேர்ந்த 6 வயது மாணவன் தினேஷ் ஹெதாவ், 50 மீட்டர் (Freestyle Swimming) நீச்சல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

நேற்றைய தினம் கல்லூரி நீச்சல் தடாகத்தில் நடைபெற்ற இந்த சாதனையானது, வெறும் 49 வினாடிகளில் 50 மீட்டர் தூரத்தைக் கடந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த சிறுவன் ஒருவரால் நிகழ்த்தப்பட்ட முன்னைய சாதனையான 1 நிமிடம் 6 வினாடிகள் என்ற சாதனையை முறியடித்து நிகழ்த்தப்பட்டது.

மேலும், இந்த சாதனையானது "சோழன் உலக சாதனைப் புத்தகம் (CBWR)" மூலம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது. 


இதைத் தொடர்ந்து, சென் பெனடிக்ட் கல்லூரியில் சாதனை மாணவனைப் பாராட்டி ஒரு சிறப்புப் பாராட்டு விழாவும் நடைபெற்றது

.

இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சோழன் சாதனைப் புத்தகத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.  

மாணவனின் இந்த வெற்றிக்கு அவரது பெற்றோர்களான குணரத்னம் தினேஷ் மற்றும் சுதர்ஷனி மகேந்திரன் ஆகியோரும், பயிற்சியாளர்கள் மற்றும் கல்லூரியின் நீச்சல் குழு ஆகியோர் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதோடு, 

மாணவன் ஹெதாவின் இந்த சாதனையானது "இலங்கையின் இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு ஊக்கமளிக்கும் சாதனையாக அமைந்துள்ளது" என கல்லூரி நிர்வாகத்தினரால் கருத்து தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். 


அரேபிய சிறுவனின் சாதனையை முறியடித்த இலங்கை சிறுவன்; நீச்சல் போட்டியில் 6 வயது சிறுவன் புதிய சாதனை கொழும்பு சென் பெனடிக்ட் கல்லூரியின் தரம் இரண்டை சேர்ந்த 6 வயது மாணவன் தினேஷ் ஹெதாவ், 50 மீட்டர் (Freestyle Swimming) நீச்சல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.நேற்றைய தினம் கல்லூரி நீச்சல் தடாகத்தில் நடைபெற்ற இந்த சாதனையானது, வெறும் 49 வினாடிகளில் 50 மீட்டர் தூரத்தைக் கடந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த சிறுவன் ஒருவரால் நிகழ்த்தப்பட்ட முன்னைய சாதனையான 1 நிமிடம் 6 வினாடிகள் என்ற சாதனையை முறியடித்து நிகழ்த்தப்பட்டது.மேலும், இந்த சாதனையானது "சோழன் உலக சாதனைப் புத்தகம் (CBWR)" மூலம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென் பெனடிக்ட் கல்லூரியில் சாதனை மாணவனைப் பாராட்டி ஒரு சிறப்புப் பாராட்டு விழாவும் நடைபெற்றது.இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சோழன் சாதனைப் புத்தகத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.  மாணவனின் இந்த வெற்றிக்கு அவரது பெற்றோர்களான குணரத்னம் தினேஷ் மற்றும் சுதர்ஷனி மகேந்திரன் ஆகியோரும், பயிற்சியாளர்கள் மற்றும் கல்லூரியின் நீச்சல் குழு ஆகியோர் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதோடு, மாணவன் ஹெதாவின் இந்த சாதனையானது "இலங்கையின் இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு ஊக்கமளிக்கும் சாதனையாக அமைந்துள்ளது" என கல்லூரி நிர்வாகத்தினரால் கருத்து தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். 

Advertisement

Advertisement

Advertisement