வவுனியா வடக்கு பிரதேசசபைக்கு உட்பட்ட நெடுங்கேணி கொத்தன்குளம் மாறா இலுப்பை கிராமத்தில் பிரதேசசபையின் அனுமதி பெறாது கிரவல் அகழ்வு இடம்பெறுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வவுனியா வடக்கு பிரதேசசபை தலைவர் தி. கிருஸ்ணவேணிக்கு தகவல் கிடைத்தததை அடுத்து கிரவல் அகழ்வை குறித்த பிரதேசசபைத் தலைவர் நேரடியாக சென்று பார்வையிட்டார்.
இதன்போது பிரதேசசபையின் அனுமதி பெறாது அத்துமீறி கிரவல் அகழ்வு நடைபெற்றதால் அதனை உடன் நிறுத்துமாறு தெரிவித்திருந்தார்.
அத்துடன் இனிவரும் காலத்தில் பிரதேசசபையின் அனுமதியினைப் பெற்று பிரதேசசபையின் அறிவுறுத்தலுக்கு அமைய கிரவல் அகழ்வு மேற்கொள்ளுமாறும் பிரதேசசபைத் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
நெடுங்கேணியில் அனுமதியின்றி கிரவல் அகழ்வு வவுனியா வடக்கு பிரதேசசபைக்கு உட்பட்ட நெடுங்கேணி கொத்தன்குளம் மாறா இலுப்பை கிராமத்தில் பிரதேசசபையின் அனுமதி பெறாது கிரவல் அகழ்வு இடம்பெறுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வவுனியா வடக்கு பிரதேசசபை தலைவர் தி. கிருஸ்ணவேணிக்கு தகவல் கிடைத்தததை அடுத்து கிரவல் அகழ்வை குறித்த பிரதேசசபைத் தலைவர் நேரடியாக சென்று பார்வையிட்டார். இதன்போது பிரதேசசபையின் அனுமதி பெறாது அத்துமீறி கிரவல் அகழ்வு நடைபெற்றதால் அதனை உடன் நிறுத்துமாறு தெரிவித்திருந்தார். அத்துடன் இனிவரும் காலத்தில் பிரதேசசபையின் அனுமதியினைப் பெற்று பிரதேசசபையின் அறிவுறுத்தலுக்கு அமைய கிரவல் அகழ்வு மேற்கொள்ளுமாறும் பிரதேசசபைத் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.