• Aug 08 2025

வீட்டிற்குள் பதுங்கி நுழைந்த கரடி; விரட்டிச் சென்ற பொம்மேரியன் - வைரலாகும் காணொளி!

shanuja / Aug 8th 2025, 3:04 pm
image

வீட்டுக்குள் நுழைந்த கரடி ஒன்றை வீட்டிலிருந்த பொம்மேரியன் நாய்  துரத்திச் சென்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 


கனடா வான்கூவர் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் கரடி ஒன்று உணவு தேடி  நுழைந்தது. வீட்டிற்குள் பதுங்கி நுழைந்த கரடி அங்குமிங்குமாக ஓடியதை வீட்டின் வளர்ப்பு நாயான ஸ்கவுட்  என்ற பொம்மேரியன் அவதானித்தது. 


பின்னர் வீட்டுக்குள் இருந்து பொம்மேரியன் நாய் ஓடிவருவதை அவதானித்த கரடி, பதறியடித்து பயத்தில் வெளியே அங்குமிங்குமாக ஓடியது. 


ஸ்கவுட் பொம்மேரியன் கரடியை விரட்டிச் சென்று, கரடி திரும்பி வராமல் பார்த்துக் கொள்ள இடைவிடாமல் குரைத்தது. சிறுது நேரம் வரைக்கும் வீட்டின் வாசலில் பொம்மேரியன் பாதுகாப்பாக நின்றது. 


கரடி வீட்டை விட்டு வெளியேறியதும் ஸ்கவுட் பொம்மேரியன் உள்ளே சென்றது. பெரிய கரடியை, வெறும் 3 கிலோ எடையுடைய  பொம்மேரியன்  நாய் விரட்டிச் சென்றுள்ள காட்சி வெளியாகி வைரலாகியுள்ளது. 


அத்துடன் இந்தக் காட்சிகள்  ரிக்ரொக்கில்  கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீட்டிற்குள் பதுங்கி நுழைந்த கரடி; விரட்டிச் சென்ற பொம்மேரியன் - வைரலாகும் காணொளி வீட்டுக்குள் நுழைந்த கரடி ஒன்றை வீட்டிலிருந்த பொம்மேரியன் நாய்  துரத்திச் சென்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. கனடா வான்கூவர் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் கரடி ஒன்று உணவு தேடி  நுழைந்தது. வீட்டிற்குள் பதுங்கி நுழைந்த கரடி அங்குமிங்குமாக ஓடியதை வீட்டின் வளர்ப்பு நாயான ஸ்கவுட்  என்ற பொம்மேரியன் அவதானித்தது. பின்னர் வீட்டுக்குள் இருந்து பொம்மேரியன் நாய் ஓடிவருவதை அவதானித்த கரடி, பதறியடித்து பயத்தில் வெளியே அங்குமிங்குமாக ஓடியது. ஸ்கவுட் பொம்மேரியன் கரடியை விரட்டிச் சென்று, கரடி திரும்பி வராமல் பார்த்துக் கொள்ள இடைவிடாமல் குரைத்தது. சிறுது நேரம் வரைக்கும் வீட்டின் வாசலில் பொம்மேரியன் பாதுகாப்பாக நின்றது. கரடி வீட்டை விட்டு வெளியேறியதும் ஸ்கவுட் பொம்மேரியன் உள்ளே சென்றது. பெரிய கரடியை, வெறும் 3 கிலோ எடையுடைய  பொம்மேரியன்  நாய் விரட்டிச் சென்றுள்ள காட்சி வெளியாகி வைரலாகியுள்ளது. அத்துடன் இந்தக் காட்சிகள்  ரிக்ரொக்கில்  கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement