• Aug 08 2025

தூணில் மோதித் தள்ளி வீதியில் தீப்பிடித்த கார்; உயிர் சேதமில்லை - பொலிஸார் விசாரணை!

shanuja / Aug 8th 2025, 3:11 pm
image

அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த கார், தூணுடன் மோதித் தள்ளியதில் தீப்பிடித்து எரிந்துள்ளது. 


இந்த விபத்துச் சம்பவம் மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (8) சம்பவித்துள்ளது. 

விபத்து தொடர்பில் தெரிய வருகையில், 


மீரிகமவிலிருந்து குருநாகல் நோக்கிப்  பயணித்துக்கொண்டிருந்த கார், மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 46.4 கி.மீ தூண் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்ததாக  பொலிஸார் தெரிவித்தனர்.


விபத்தில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை. எனினும் கார் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.  


தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், விபத்து தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தூணில் மோதித் தள்ளி வீதியில் தீப்பிடித்த கார்; உயிர் சேதமில்லை - பொலிஸார் விசாரணை அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த கார், தூணுடன் மோதித் தள்ளியதில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்துச் சம்பவம் மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (8) சம்பவித்துள்ளது. விபத்து தொடர்பில் தெரிய வருகையில், மீரிகமவிலிருந்து குருநாகல் நோக்கிப்  பயணித்துக்கொண்டிருந்த கார், மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 46.4 கி.மீ தூண் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்ததாக  பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை. எனினும் கார் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.  தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், விபத்து தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement