இலங்கை மீது சைபர் தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகின் முதனிலை சைபர் பாதுகாப்பு நிறுவனமான கெஸ்பர்ஸ்கி நிறுவனத்தினால் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிக ஆக்ரோஷமான அச்சுறுத்தல் நிலவும் நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.
குறிப்பாக சைட்வைண்டர் என்ற சைபர் தாக்குதல் குழுவின் அச்சுறுத்தல் நிலவுவதாகவும், இதில் இலங்கை ஓர் முக்கிய இலக்குகளில் ஒன்றாக அடையாளப்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரச இரகசியங்கள் உள்ளிட்ட முக்கியமான தகவல்களை இலக்கு வைத்து இந்த குழுக்கள் சைபர் தாக்குதல் நடத்துவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ், கம்போடியா, வியட்நாம், சீனா, இந்தியா, மாலத்தீவு, நேபாளம், மியான்மர், இந்தோனேசியா, மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்னஞ்சல்கள் மூலம் சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சைபர் தாக்குதல்கள் தகவல்களை திரட்டும் நோக்கிலானது அல்ல எனவும் புவிசார் அரசியல் காரணிகளையும் அரச இரகசியங்களை கைப்பற்றும் நோக்கிலும் மேற்கொள்ளப்படுகின்றது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மீது சைபர் தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம் வந்தது எச்சரிக்கை இலங்கை மீது சைபர் தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.உலகின் முதனிலை சைபர் பாதுகாப்பு நிறுவனமான கெஸ்பர்ஸ்கி நிறுவனத்தினால் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிக ஆக்ரோஷமான அச்சுறுத்தல் நிலவும் நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.குறிப்பாக சைட்வைண்டர் என்ற சைபர் தாக்குதல் குழுவின் அச்சுறுத்தல் நிலவுவதாகவும், இதில் இலங்கை ஓர் முக்கிய இலக்குகளில் ஒன்றாக அடையாளப்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அரச இரகசியங்கள் உள்ளிட்ட முக்கியமான தகவல்களை இலக்கு வைத்து இந்த குழுக்கள் சைபர் தாக்குதல் நடத்துவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பங்களாதேஷ், கம்போடியா, வியட்நாம், சீனா, இந்தியா, மாலத்தீவு, நேபாளம், மியான்மர், இந்தோனேசியா, மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மின்னஞ்சல்கள் மூலம் சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த சைபர் தாக்குதல்கள் தகவல்களை திரட்டும் நோக்கிலானது அல்ல எனவும் புவிசார் அரசியல் காரணிகளையும் அரச இரகசியங்களை கைப்பற்றும் நோக்கிலும் மேற்கொள்ளப்படுகின்றது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.