• Aug 31 2025

திருமலையில் தங்கியிருந்து வேலை செய்து வந்த சாரதி மர்ம மரணம்

Chithra / Aug 31st 2025, 8:16 am
image


சம்பூர் - பாட்டாளிபுரம் பிரதேசத்தில், வேலை செய்து வந்த, ரத்தினபுரி - எம்பிலிபிடிய பகுதியைச் சேர்ந்த, 35 வயதான பெகோ வாகன சாரதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,

சம்பூர் - பாட்டாளிபுரம் பிரதேசத்தில், தற்போது குளங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன, 

இந்தப் பகுதியில் குறித்த நபர்,  இம்மாதம் 14ஆம் திகதியிலிருந்து, பெகோ வாகன சாரதியாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இவர் நேற்றுமுன்தினம்  மூதூர் வைத்தியசாலைக்கு சென்று, அங்கு, நோயாளர் விடுதியில்  தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்ததாகவும், நேற்று காலை  வைத்தியசாலையில் இருந்து வெளியேறி இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வெளியேறியவர், மூதூர் ஜபல் நகர், 64 ஆம் கட்டை பகுதியில், அவர் தங்கி இருந்து வேலைக்குச் சென்ற இடத்திலிருந்து, சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

நீதிபதியின் உத்தரவு அமைய, சடலம் பிரேத பரிசோதனைக்காக, திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு  எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


திருமலையில் தங்கியிருந்து வேலை செய்து வந்த சாரதி மர்ம மரணம் சம்பூர் - பாட்டாளிபுரம் பிரதேசத்தில், வேலை செய்து வந்த, ரத்தினபுரி - எம்பிலிபிடிய பகுதியைச் சேர்ந்த, 35 வயதான பெகோ வாகன சாரதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,சம்பூர் - பாட்டாளிபுரம் பிரதேசத்தில், தற்போது குளங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன, இந்தப் பகுதியில் குறித்த நபர்,  இம்மாதம் 14ஆம் திகதியிலிருந்து, பெகோ வாகன சாரதியாக பணிபுரிந்து வந்துள்ளார்.இந்த நிலையில், இவர் நேற்றுமுன்தினம்  மூதூர் வைத்தியசாலைக்கு சென்று, அங்கு, நோயாளர் விடுதியில்  தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்ததாகவும், நேற்று காலை  வைத்தியசாலையில் இருந்து வெளியேறி இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறு வெளியேறியவர், மூதூர் ஜபல் நகர், 64 ஆம் கட்டை பகுதியில், அவர் தங்கி இருந்து வேலைக்குச் சென்ற இடத்திலிருந்து, சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக  பொலிஸார் தெரிவித்தனர்.நீதிபதியின் உத்தரவு அமைய, சடலம் பிரேத பரிசோதனைக்காக, திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு  எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement