இலங்கை தெய்வத்தின் கோபத்திற்கு உட்பட்டு உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாடு இன்று எதிர் நோக்கியுள்ள அனர்த்த நிலைமைகளுக்கு தெய்வத்தின் கோபமே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
சில விடயங்களை மனிதர்களினால் கட்டுப்படுத்த முடியும் எனவும் சிலவற்றை அவ்வாறே கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் குரோதத்தை விதைத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் இந்த அரசாங்கம் பாரிய அளவில் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டது.
இந்த பொய்களினால் தெய்வக் கோபம் ஏற்பட்டு நாடு அனர்த்தங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டாயிரத்து நான்காம் ஆண்டிலும் இவ்வாறு ஓர் நிலைமை ஏற்பட்டு சுனாமி பேரழிவு நிகழ்ந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் குரோதம், கோவம், பேராசை, பொய்களை விதைத்தது எனவும் அதன் பார தூரமான விளைவுகள் ஆகத்தானவை எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடு எதிர்நோக்கியுள்ள அனர்த்த நிலைமைகளுக்கு தெய்வத்தின் கோபமே காரணம் புலம்பும் வஜிர இலங்கை தெய்வத்தின் கோபத்திற்கு உட்பட்டு உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.நாடு இன்று எதிர் நோக்கியுள்ள அனர்த்த நிலைமைகளுக்கு தெய்வத்தின் கோபமே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.சில விடயங்களை மனிதர்களினால் கட்டுப்படுத்த முடியும் எனவும் சிலவற்றை அவ்வாறே கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் குரோதத்தை விதைத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் இந்த அரசாங்கம் பாரிய அளவில் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டது.இந்த பொய்களினால் தெய்வக் கோபம் ஏற்பட்டு நாடு அனர்த்தங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.கடந்த இரண்டாயிரத்து நான்காம் ஆண்டிலும் இவ்வாறு ஓர் நிலைமை ஏற்பட்டு சுனாமி பேரழிவு நிகழ்ந்தது என அவர் தெரிவித்துள்ளார்.இந்த அரசாங்கம் குரோதம், கோவம், பேராசை, பொய்களை விதைத்தது எனவும் அதன் பார தூரமான விளைவுகள் ஆகத்தானவை எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.