• Sep 10 2025

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்கும் சட்டமூலம்; உயர் நீதிமன்றின் தீர்மானத்தை அறிவித்தார் சபாநாயகர்

Chithra / Sep 9th 2025, 10:28 am
image

 

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிகளுக்கும் முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளது. 

இன்றைய சபை அமர்வின் ஆரம்பித்தில் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரட்ன உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை அறிவித்தார். 

இதன்படி குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் இன்று அறிவித்தார்.

குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின் விதவைகளுக்கான ஓய்வூதியம் தவிர்த்து, உத்தியோகபூர்வ இல்லம், தனிப்பட்ட பணியாட்கள் உள்ளிட்ட சலுகைகளை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்கும் சட்டமூலம்; உயர் நீதிமன்றின் தீர்மானத்தை அறிவித்தார் சபாநாயகர்  முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிகளுக்கும் முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளது. இன்றைய சபை அமர்வின் ஆரம்பித்தில் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரட்ன உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை அறிவித்தார். இதன்படி குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் இன்று அறிவித்தார்.குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின் விதவைகளுக்கான ஓய்வூதியம் தவிர்த்து, உத்தியோகபூர்வ இல்லம், தனிப்பட்ட பணியாட்கள் உள்ளிட்ட சலுகைகளை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement