இலங்கையில் இடம்பெறும் கைதுகளில் பெரும்பான்மையானவை அரசியல் கண்காட்சிக்காகவே மேற்கொள்ளப்படுகின்றன என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
காலியில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் 100 பேரை விசாரணைக்கு எடுத்துக்கொண்டால், 98பேர் குற்றமற்றவர்களாக வீடுசெல்கிறார்கள்.
இந்த கலாசாரத்தை மாற்றுவதாக இருந்தால், அரசியலமைப்பில் இந்த உறுப்புரைகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.
விசாரணைகளை பலப்படுத்த வேண்டி இருக்கிறது. விசாரணைகளின் அறிக்கையின் பிரகாரமே நீதிமன்றம் செயல்படுகிறது.
இலங்கையில் இதுதொடர்பான புள்ளிவிபரங்களை பார்த்தால், 100பேர் கைதுசெய்யப்பட்டால், இரண்பேர் குற்றவாளியாக்கப்படுகின்றனர். 98பேர் குற்றமற்றவர்களாக விடுவிக்கப்படுகின்றனர். அதனால் இலங்கையில் கைதுகள் அரசியல் கண்காட்சியாக்கப்பட்டிருக்கின்றன.
இந்த அரசியல் கண்காட்சியை எதிர்காலத்தில் அரசியலமைப்பு உறுப்புரைகளில் திருத்தம் மேற்கொண்டு இல்லாமலாக்க வேண்டும்.என்றார்.
இலங்கையில் இடம்பெறும் கைதுகளில் பெரும்பாலானவை அரசியல் கண்காட்சி – வஜிர சீற்றம் இலங்கையில் இடம்பெறும் கைதுகளில் பெரும்பான்மையானவை அரசியல் கண்காட்சிக்காகவே மேற்கொள்ளப்படுகின்றன என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். காலியில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.இலங்கையில் 100 பேரை விசாரணைக்கு எடுத்துக்கொண்டால், 98பேர் குற்றமற்றவர்களாக வீடுசெல்கிறார்கள்.இந்த கலாசாரத்தை மாற்றுவதாக இருந்தால், அரசியலமைப்பில் இந்த உறுப்புரைகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. விசாரணைகளை பலப்படுத்த வேண்டி இருக்கிறது. விசாரணைகளின் அறிக்கையின் பிரகாரமே நீதிமன்றம் செயல்படுகிறது. இலங்கையில் இதுதொடர்பான புள்ளிவிபரங்களை பார்த்தால், 100பேர் கைதுசெய்யப்பட்டால், இரண்பேர் குற்றவாளியாக்கப்படுகின்றனர். 98பேர் குற்றமற்றவர்களாக விடுவிக்கப்படுகின்றனர். அதனால் இலங்கையில் கைதுகள் அரசியல் கண்காட்சியாக்கப்பட்டிருக்கின்றன. இந்த அரசியல் கண்காட்சியை எதிர்காலத்தில் அரசியலமைப்பு உறுப்புரைகளில் திருத்தம் மேற்கொண்டு இல்லாமலாக்க வேண்டும்.என்றார்.