இலங்கையின் பொருளாதார மீட்சி எதிர்பார்த்ததை விட தற்போது வேகமாக முன்னேறி வருவதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதார மீட்சி ஆரம்பத்தில் நாம் எதிர்பார்த்ததை விடவும் தற்போது வேகமாக முன்னேறி வருகின்றது.
ஒரு நாடு நெருக்கடியால் பாதிக்கப்பட்டவுடன், உற்பத்தி இழப்பை மீட்டெடுக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும். எங்கள் விடயத்தில், மூன்று ஆண்டுகளுக்குள் அந்த நிலையை அடைந்துள்ளோம்.
அடுத்த ஆண்டுக்குள், வேலைவாய்ப்பு, வறுமைக் குறைப்பு, வருமானம் மற்றும் வாழ்க்கைச் செலவு போன்ற முக்கிய துறைகளில் இலங்கை நெருக்கடிக்கு முந்தைய நிலைகளை விட சிறப்பாக இருக்கும்.
அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில், நாம் முன்பு இருந்த நிலையை அடைய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார மீட்சி எதிர்பார்த்ததை விட வேகமாக உள்ளது – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு இலங்கையின் பொருளாதார மீட்சி எதிர்பார்த்ததை விட தற்போது வேகமாக முன்னேறி வருவதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பொருளாதார மீட்சி ஆரம்பத்தில் நாம் எதிர்பார்த்ததை விடவும் தற்போது வேகமாக முன்னேறி வருகின்றது.ஒரு நாடு நெருக்கடியால் பாதிக்கப்பட்டவுடன், உற்பத்தி இழப்பை மீட்டெடுக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும். எங்கள் விடயத்தில், மூன்று ஆண்டுகளுக்குள் அந்த நிலையை அடைந்துள்ளோம்.அடுத்த ஆண்டுக்குள், வேலைவாய்ப்பு, வறுமைக் குறைப்பு, வருமானம் மற்றும் வாழ்க்கைச் செலவு போன்ற முக்கிய துறைகளில் இலங்கை நெருக்கடிக்கு முந்தைய நிலைகளை விட சிறப்பாக இருக்கும். அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில், நாம் முன்பு இருந்த நிலையை அடைய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.