• Aug 14 2025

துப்பாக்கிச் சூடுகளால் அதிரும் இலங்கை; ஒரே நாளில் மூன்று சம்பவங்கள்

Chithra / Aug 14th 2025, 7:56 am
image

இலங்கையில் நேற்றையதினம் மட்டும் மூன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

அதன்படி, மினுவங்கொட, கொட்டுகொட பகுதியில் நேற்று பிற்பகல், அடையாளம் தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து, திலீப லக்மால் எனப்படும் ‘பஸ் திலீப’ என்பவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

சம்பவம் நடந்தபோது, பஸ் திலீப தனது மனைவி, நண்பர், மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வீட்டின் முற்றத்தில் இருந்துள்ளார்

குற்றவாளிகள் பாதுகாப்புப் படையினர் அணியும் சீருடைகளை ஒத்த ஆடைகளை அணிந்திருந்ததாக வீட்டார் தெரிவித்துள்ளனர்.


மாலை 2.30 மணியளவில் நடந்த இந்தச் சூட்டில், பஸ் திலீப உயிர் தப்பினார். துப்பாக்கிதாரிகள் உடனடியாக தப்பிச் சென்றனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த தருணம், மற்றும் சந்தேகநபர்கள் தப்பிச் செல்லும் காட்சி, அருகிலுள்ள CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.

பொலிஸார் குற்றவாளிகளை தேடி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


இந்நிலையில் மீகொட, முத்துஹேனவத்த, நதுன் உயன பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் நேற்று (13) இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த இருவர், வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். 


9 மில்லிமீற்றர் ரக தோட்டா கொண்ட பிஸ்டல் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாவும், தோட்டாவும் தோட்டா உறையும் வீட்டுக்கு முன்னால் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, மோட்டார் சைக்கிள் முத்துஹேனவத்த வீதியை நோக்கி தப்பிச் சென்றுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் மீகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இதேவேளைஹங்வெல்ல, துன்னான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நேற்று (13) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீடொன்றில் இருந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த துன்னான பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர், சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


துப்பாக்கிச் சூட்டுக்கான காரணமோ அல்லது சந்தேக நபர்கள் தொடர்பான தகவலோ இன்னும் வெளியாகவில்லை, மேலும் ஹங்வெல்ல பொலிஸ் உள்ளிட்ட பல பொலிஸ் குழுக்கள் சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன், 2025 ஆம் ஆண்டில் இதுவரையில் 80ற்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதோடு, இதில் 44 பேர் மரணித்துள்ளனர். மேலும் 47 பேர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடுகளால் அதிரும் இலங்கை; ஒரே நாளில் மூன்று சம்பவங்கள் இலங்கையில் நேற்றையதினம் மட்டும் மூன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி, மினுவங்கொட, கொட்டுகொட பகுதியில் நேற்று பிற்பகல், அடையாளம் தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து, திலீப லக்மால் எனப்படும் ‘பஸ் திலீப’ என்பவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.சம்பவம் நடந்தபோது, பஸ் திலீப தனது மனைவி, நண்பர், மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வீட்டின் முற்றத்தில் இருந்துள்ளார்குற்றவாளிகள் பாதுகாப்புப் படையினர் அணியும் சீருடைகளை ஒத்த ஆடைகளை அணிந்திருந்ததாக வீட்டார் தெரிவித்துள்ளனர்.மாலை 2.30 மணியளவில் நடந்த இந்தச் சூட்டில், பஸ் திலீப உயிர் தப்பினார். துப்பாக்கிதாரிகள் உடனடியாக தப்பிச் சென்றனர்.துப்பாக்கிச் சூடு நடந்த தருணம், மற்றும் சந்தேகநபர்கள் தப்பிச் செல்லும் காட்சி, அருகிலுள்ள CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.பொலிஸார் குற்றவாளிகளை தேடி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மீகொட, முத்துஹேனவத்த, நதுன் உயன பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் நேற்று (13) இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த இருவர், வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். 9 மில்லிமீற்றர் ரக தோட்டா கொண்ட பிஸ்டல் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாவும், தோட்டாவும் தோட்டா உறையும் வீட்டுக்கு முன்னால் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, மோட்டார் சைக்கிள் முத்துஹேனவத்த வீதியை நோக்கி தப்பிச் சென்றுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் மீகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளைஹங்வெல்ல, துன்னான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (13) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீடொன்றில் இருந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த துன்னான பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர், சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணமோ அல்லது சந்தேக நபர்கள் தொடர்பான தகவலோ இன்னும் வெளியாகவில்லை, மேலும் ஹங்வெல்ல பொலிஸ் உள்ளிட்ட பல பொலிஸ் குழுக்கள் சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன், 2025 ஆம் ஆண்டில் இதுவரையில் 80ற்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதோடு, இதில் 44 பேர் மரணித்துள்ளனர். மேலும் 47 பேர் காயமடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement