கல்முனையைச் சேர்ந்த புகழ்பெற்ற கல்வியாளர் மற்றும் பொறியியல் நிபுணர் பேராசிரியர் எம்.ஏ.எல்.ஏ. ஹலீம், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக (SEUSL) பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாக மீண்டும் ஒருமித்த ஆதரவுடன் தெரிவாகியுள்ளார்.
இந்தத் தெரிவு, 2025 ஆகஸ்ட் 15 ஆம் திகதி, பொறியியல் பீட கேட்போர் கூடத்தில் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு ஒன்று கூடலில் நடைபெற்றது.
பீட உறுப்பினர்கள் அனைவரின் ஏகோபித்த விருப்பத்தின் பேரில் அவர் மீண்டும் தேர்வுசெய்யப்பட்டமை, அவரது தலைமைத்துவம் மற்றும் பீட முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பு மீது அங்கத்தினர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் எம்.ஏ.எல்.ஏ. ஹலீம் மீண்டும் தெரிவு கல்முனையைச் சேர்ந்த புகழ்பெற்ற கல்வியாளர் மற்றும் பொறியியல் நிபுணர் பேராசிரியர் எம்.ஏ.எல்.ஏ. ஹலீம், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக (SEUSL) பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாக மீண்டும் ஒருமித்த ஆதரவுடன் தெரிவாகியுள்ளார்.இந்தத் தெரிவு, 2025 ஆகஸ்ட் 15 ஆம் திகதி, பொறியியல் பீட கேட்போர் கூடத்தில் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு ஒன்று கூடலில் நடைபெற்றது. பீட உறுப்பினர்கள் அனைவரின் ஏகோபித்த விருப்பத்தின் பேரில் அவர் மீண்டும் தேர்வுசெய்யப்பட்டமை, அவரது தலைமைத்துவம் மற்றும் பீட முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பு மீது அங்கத்தினர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.