• Jan 10 2026

ஊவா மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

Chithra / Jan 9th 2026, 8:25 am
image

 

ஊவா மாகாணத்தில் உள்ள சில பாடசாலைகளுக்கு இன்று முற்பகல் 11 மணிக்கு முன்னதாகவே விடுமுறை வழங்கப்படும் என ஊவா மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

 

மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கே விடுமுறை வழங்கப்படவுள்ளதாக ஊவா மாகாண கல்வி பணிப்பாளர்  தெரிவித்தார். 

 

பதுளை மாவட்டத்தின் கந்தகெட்டிய, பசறை, பதுளை, லுணுகலை, ஹப்புத்தளை, எல்ல, பண்டாரவளை, ஹாலி - எல, வெளிமடை, மிகஹகிவுல மற்றும் ஊவா பரணகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 

இந்தநிலையிலேயே, குறித்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை  ஊவா மாகாணத்தில் உள்ள சில பாடசாலைகளுக்கு இன்று முற்பகல் 11 மணிக்கு முன்னதாகவே விடுமுறை வழங்கப்படும் என ஊவா மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.  மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கே விடுமுறை வழங்கப்படவுள்ளதாக ஊவா மாகாண கல்வி பணிப்பாளர்  தெரிவித்தார்.  பதுளை மாவட்டத்தின் கந்தகெட்டிய, பசறை, பதுளை, லுணுகலை, ஹப்புத்தளை, எல்ல, பண்டாரவளை, ஹாலி - எல, வெளிமடை, மிகஹகிவுல மற்றும் ஊவா பரணகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.  இந்தநிலையிலேயே, குறித்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement