சரிகமப சீனியர் சீசன் 5 இன் இந்த வார சுற்றில் இலங்கையைச் சேர்ந்த சபேசன் இசைத்திறன் மட்டுமன்றி தனது நடிப்புத்திறனையும் மேடையில் வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளார்.
தமிழகத்தின் பிரபலமான சீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தின் சரிகமப இசை நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 தற்போது ஆரம்பமாகி பிரம்மாண்டமாக இடம்பெற்று வருகின்றது.
சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியின் இந்த வார சுற்று எதிர்வரும் 19ஆம், 20 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிலையில் இந்த வார சுற்றின் புறமோவை சீ தமிழ் சரிகமப குழு வெளியிட்டுள்ளது.
அதற்கமைய இந்த வார சுற்று “ரென்ட் கொட்டா ரவுண்ட்” சுற்றாக இடம்பெறவுள்ளது. இதில் இலங்கையைச் சேர்ந்த சபேசன் இசையுடன் சேர்த்து தனது நடிப்புத் திறனையும் மேடையில் வெளிப்படுத்துவதான வகையில் புறமோ காட்சி வெளியாகியுள்ளது.
சபேசன் தனது சுற்றில் புது மாப்பிளைக்கு நல்ல யோகமடி என்ற பாடலை எடுத்து அந்தப் பாடலுக்கான நடிப்பையும் நளினத்தையும் மேடையில் வெளிப்படுத்தி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.
சபேசன் சிறந்த முறையில் பாடல் பாடுவார் என்பது நடுவர்கள் உட்ப அனைவரும் அறிந்தது. எனினும் அவருக்குள் இவ்வாறான ஒரு நடிப்புத் திறன் உள்ளதா என்ற ரீதியில் நடுவர்கள் உட்பட அனைவரும் ஒரு கணம் சிலிர்த்துப் போய் இருந்தனர்.
அதன்பின்னர் அவர் பாடல்பாடி முடிந்ததும் நடுவர்கள் அனைவரும் எழுந்து நின்று அவரை உச்ச அளவில் வாழ்த்தியதுடன் மேடைக்குச் சென்று அவரை அரவணைத்தும் தமது பாராட்டுக்களை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினர்.
சரிகமப சீனியர் சீசன் 5 ஆரம்பமாகி நடைபெற்ற அனைத்து சுற்றிலும் கோல்டனைத் தட்டித்தூக்கிய சபேசன், இந்த வாரமும் தனது இசை கலந்த நடிப்புத்திறனை வெளிப்படுத்திகோல்டன் பெவோர்மன்ஸை தட்டித்தூக்கியுள்ளார்.
வெளியான இந்த வார புறமோவைக் கண்டுகளித்து வரும் இலங்கை உள்ளிட்ட சபேசனின் இரசிகர்கள் “எப்படி நம்ம சபேசன் அசத்திட்டான்” என்றவாறான நெகிழ்ச்சியான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு சபேசனின் பாராட்டு மழையைப் பொழிந்து வருகின்றனர்.
கமலைப் போல நடித்து மெய்சிலிர்க்க வைத்த சபேசன் சரிகமப சீனியர் சீசன் 5 இன் இந்த வார சுற்றில் இலங்கையைச் சேர்ந்த சபேசன் இசைத்திறன் மட்டுமன்றி தனது நடிப்புத்திறனையும் மேடையில் வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளார். தமிழகத்தின் பிரபலமான சீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தின் சரிகமப இசை நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 தற்போது ஆரம்பமாகி பிரம்மாண்டமாக இடம்பெற்று வருகின்றது. சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியின் இந்த வார சுற்று எதிர்வரும் 19ஆம், 20 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிலையில் இந்த வார சுற்றின் புறமோவை சீ தமிழ் சரிகமப குழு வெளியிட்டுள்ளது. அதற்கமைய இந்த வார சுற்று “ரென்ட் கொட்டா ரவுண்ட்” சுற்றாக இடம்பெறவுள்ளது. இதில் இலங்கையைச் சேர்ந்த சபேசன் இசையுடன் சேர்த்து தனது நடிப்புத் திறனையும் மேடையில் வெளிப்படுத்துவதான வகையில் புறமோ காட்சி வெளியாகியுள்ளது. சபேசன் தனது சுற்றில் புது மாப்பிளைக்கு நல்ல யோகமடி என்ற பாடலை எடுத்து அந்தப் பாடலுக்கான நடிப்பையும் நளினத்தையும் மேடையில் வெளிப்படுத்தி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளார். சபேசன் சிறந்த முறையில் பாடல் பாடுவார் என்பது நடுவர்கள் உட்ப அனைவரும் அறிந்தது. எனினும் அவருக்குள் இவ்வாறான ஒரு நடிப்புத் திறன் உள்ளதா என்ற ரீதியில் நடுவர்கள் உட்பட அனைவரும் ஒரு கணம் சிலிர்த்துப் போய் இருந்தனர். அதன்பின்னர் அவர் பாடல்பாடி முடிந்ததும் நடுவர்கள் அனைவரும் எழுந்து நின்று அவரை உச்ச அளவில் வாழ்த்தியதுடன் மேடைக்குச் சென்று அவரை அரவணைத்தும் தமது பாராட்டுக்களை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினர். சரிகமப சீனியர் சீசன் 5 ஆரம்பமாகி நடைபெற்ற அனைத்து சுற்றிலும் கோல்டனைத் தட்டித்தூக்கிய சபேசன், இந்த வாரமும் தனது இசை கலந்த நடிப்புத்திறனை வெளிப்படுத்திகோல்டன் பெவோர்மன்ஸை தட்டித்தூக்கியுள்ளார். வெளியான இந்த வார புறமோவைக் கண்டுகளித்து வரும் இலங்கை உள்ளிட்ட சபேசனின் இரசிகர்கள் “எப்படி நம்ம சபேசன் அசத்திட்டான்” என்றவாறான நெகிழ்ச்சியான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு சபேசனின் பாராட்டு மழையைப் பொழிந்து வருகின்றனர்.