ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி வடக்கு மாகாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டம் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க தலைமையில் புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போதே எதிர்வரும் 15 ஆம் திகதி தான் வடக்குக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கில் காணிகளை விடுவிப்பது, வீதிகளைத் திறப்பது, தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
இந்தப் பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்குவதற்கு அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை ஜனாதிபதி வழங்கியதுடன் எதிர்வரும் 15 ஆம் திகதி தான் வடக்குக்கு வரும்போது இப்பிரச்சினைகள் தொடர்பில் ஆழமாக ஆராய்வோம் எனவும் கூறியுள்ளார்.
வடக்குக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி அநுர ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி வடக்கு மாகாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டம் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க தலைமையில் புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போதே எதிர்வரும் 15 ஆம் திகதி தான் வடக்குக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.வடக்கு மற்றும் கிழக்கில் காணிகளை விடுவிப்பது, வீதிகளைத் திறப்பது, தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.இந்தப் பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்குவதற்கு அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை ஜனாதிபதி வழங்கியதுடன் எதிர்வரும் 15 ஆம் திகதி தான் வடக்குக்கு வரும்போது இப்பிரச்சினைகள் தொடர்பில் ஆழமாக ஆராய்வோம் எனவும் கூறியுள்ளார்.