• Jan 10 2026

நாட்டில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி!

Chithra / Jan 1st 2026, 11:11 am
image

மன்னார் மறை மாவட்டத்தில் புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.

2026 ஆம் ஆண்டு தூய ஆவியானவரின் ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் நள்ளிரவு மன்னார் தூய செபஸ்தியார் பேராலய வளாகத்தில் அமைக்கப்பட்ட பெயர் பலகையை மன்னார் மறைமாவட்ட ஆயர் திரை நீக்கம் செய்து வைத்தார்.

அதனை தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம்  ஆண்டகை தலைமையில் குருக்கள் இணைந்து   திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுத்தனர்.

இதன்போது  ஆலயத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசேட பாதுகாப்பை வழங்கியிருந்தனர்.

மேலும் குறித்த புத்தாண்டு நள்ளிரவு திருப்பலியில்  பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



யாழ். மறைமாவட்ட  செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் 2026ம் ஆண்டு புது வருட பிறப்பு விழா மிக சிறப்பாக இடம்பெற்றது 

இவ் புதுவருட பிறப்பு விழா  நள்ளிரவு திருச்செபமாலையுடன் 11:50 மணியளவில் செம்பியன் பற்று பங்கு தந்தை ஜஸ்டின் ஆதர் தலைமையில் திருப்பலி இடம்பெற்றது 

திருப்பலியில் பொது மக்கள், வடமராட்சி கிழக்கு பகுதியில் இயங்கும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அருட்தந்தையினர், அருட்சகோதரியினர், இளைஞர்கள் சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் 



இதேவேளை வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் புதுவருட விசேட ஆராதனை நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தன.

நள்ளிரவு 12 மணிக்கு ஆலயத்தின் பங்குத்தந்தை கிறிஸ்தோபர் அந்தோனிதாஸ் டலீமா தலைமையில் இடம்பெற்ற விசேட ஆராதனையில் திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டதோடு  வழிபாடுகளும் இடம் பெற்றிருந்தது.

இதன்போது நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



புதுவருடப்பிறப்பினையொட்டி கிழக்கு மாகாணத்தில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு ஆராதனைகள் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வழிபாடு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் நடைபெற்றது.

ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை ஜெமில்டன் தலைமையிலான அருட்தந்தையர்களினால் புதுவருடத்தினையொட்டி விசேட திருப்பலி பூஜைகள் நடைபெற்றன.

இதன்போது துநாட்டில் நீடித்த சமாதானமும் சாந்தியும் வேண்டி விசேட பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் இயற்கை அனர்த்தங்களில் இருந்து மக்களை பாதுகாக்கவிசேட பிரார்த்தனைகளும் நடைபெற்றன.

புதுவருட பிறப்பினையொட்டி இதன்போது விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் அனைவருக்கும் ஆசிர்வாதமும் வழங்கப்பட்டது.

புதுவருட சிறப்பு வழிபாட்டில் மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


நாட்டில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி மன்னார் மறை மாவட்டத்தில் புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டு தூய ஆவியானவரின் ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் நள்ளிரவு மன்னார் தூய செபஸ்தியார் பேராலய வளாகத்தில் அமைக்கப்பட்ட பெயர் பலகையை மன்னார் மறைமாவட்ட ஆயர் திரை நீக்கம் செய்து வைத்தார்.அதனை தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம்  ஆண்டகை தலைமையில் குருக்கள் இணைந்து   திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுத்தனர்.இதன்போது  ஆலயத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசேட பாதுகாப்பை வழங்கியிருந்தனர்.மேலும் குறித்த புத்தாண்டு நள்ளிரவு திருப்பலியில்  பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.யாழ். மறைமாவட்ட  செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் 2026ம் ஆண்டு புது வருட பிறப்பு விழா மிக சிறப்பாக இடம்பெற்றது இவ் புதுவருட பிறப்பு விழா  நள்ளிரவு திருச்செபமாலையுடன் 11:50 மணியளவில் செம்பியன் பற்று பங்கு தந்தை ஜஸ்டின் ஆதர் தலைமையில் திருப்பலி இடம்பெற்றது திருப்பலியில் பொது மக்கள், வடமராட்சி கிழக்கு பகுதியில் இயங்கும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அருட்தந்தையினர், அருட்சகோதரியினர், இளைஞர்கள் சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் இதேவேளை வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் புதுவருட விசேட ஆராதனை நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தன.நள்ளிரவு 12 மணிக்கு ஆலயத்தின் பங்குத்தந்தை கிறிஸ்தோபர் அந்தோனிதாஸ் டலீமா தலைமையில் இடம்பெற்ற விசேட ஆராதனையில் திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டதோடு  வழிபாடுகளும் இடம் பெற்றிருந்தது.இதன்போது நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.புதுவருடப்பிறப்பினையொட்டி கிழக்கு மாகாணத்தில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு ஆராதனைகள் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வழிபாடு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் நடைபெற்றது.ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை ஜெமில்டன் தலைமையிலான அருட்தந்தையர்களினால் புதுவருடத்தினையொட்டி விசேட திருப்பலி பூஜைகள் நடைபெற்றன.இதன்போது துநாட்டில் நீடித்த சமாதானமும் சாந்தியும் வேண்டி விசேட பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் இயற்கை அனர்த்தங்களில் இருந்து மக்களை பாதுகாக்கவிசேட பிரார்த்தனைகளும் நடைபெற்றன.புதுவருட பிறப்பினையொட்டி இதன்போது விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் அனைவருக்கும் ஆசிர்வாதமும் வழங்கப்பட்டது.புதுவருட சிறப்பு வழிபாட்டில் மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement