• Oct 11 2024

தேசிய ஜனநாயக மக்கள் முன்னனி தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரவுக்கு ஆதரவு!

Tamil nila / Sep 16th 2024, 10:35 pm
image

Advertisement

தேசிய  ஜனநாயக மக்கள் முன்னனி தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக அக் கட்சியின் தலைவர் எம்.ஆனந்தராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது கட்சி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பில் உயர்மட்ட குழு கூடி ஆராய்ந்தது. அதில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய நாம் எமது முடிவை வெளியிடுகின்றோம்.

தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்கள் வடபகுதிக்கு வருகை தந்து பல கட்சிகளிடமும் தமது ஆதவை கோரி வருகின்றனர். எமது கட்சி 2019 ஆம் ஆண்டு நிறுவன ரீதியாக உருவாக்கப்பட்ட கட்சி. இந்தநிலையில் பால ஜனாதிபதி வேட்பாளர்கள் எமது ஆதவையும் கோரியிருந்தார்கள். எமது கட்சியின் உயர் பீடம் ஆராய்ந்ததன் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடும் அனுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளோம்.

தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் வெற்றி பெறுவதன் மூலமே இந்த நாட்டை ஊழல் அற்ற ஒரு நாடாக மாற்ற முடியும். இன்று முழு நாடும் அனுரவுடன் நிற்கின்றது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தில் நாமும் பங்காளராகி எமக்கான தேவைகளைப் பெற தேசிய மக்கள் சக்திக்கு எமது ஆதரவை தமிழ் மக்கள் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக மக்கள் முன்னனி தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரவுக்கு ஆதரவு தேசிய  ஜனநாயக மக்கள் முன்னனி தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக அக் கட்சியின் தலைவர் எம்.ஆனந்தராஜா தெரிவித்துள்ளார்.வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,எமது கட்சி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பில் உயர்மட்ட குழு கூடி ஆராய்ந்தது. அதில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய நாம் எமது முடிவை வெளியிடுகின்றோம்.தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்கள் வடபகுதிக்கு வருகை தந்து பல கட்சிகளிடமும் தமது ஆதவை கோரி வருகின்றனர். எமது கட்சி 2019 ஆம் ஆண்டு நிறுவன ரீதியாக உருவாக்கப்பட்ட கட்சி. இந்தநிலையில் பால ஜனாதிபதி வேட்பாளர்கள் எமது ஆதவையும் கோரியிருந்தார்கள். எமது கட்சியின் உயர் பீடம் ஆராய்ந்ததன் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடும் அனுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளோம்.தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் வெற்றி பெறுவதன் மூலமே இந்த நாட்டை ஊழல் அற்ற ஒரு நாடாக மாற்ற முடியும். இன்று முழு நாடும் அனுரவுடன் நிற்கின்றது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தில் நாமும் பங்காளராகி எமக்கான தேவைகளைப் பெற தேசிய மக்கள் சக்திக்கு எமது ஆதரவை தமிழ் மக்கள் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement