மன்னார் பேசாலை கடற்கரையில் நவம்பர் 30 அன்று அரிய கடல் பாலூட்டியான டுகோங் (Dugong dugon) ஒன்றின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
முதலில் உள்ளூர் மீனவர்கள் மற்றும் கடற்படை வீரர்களால் 8 அடி 2 அங்குல உயரமுள்ள ஆண் டுகோங் அவதானிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து வனவிலங்கு அதிகாரிகள் பரிசோதித்த போது, வயிற்றில் 11 செ.மீ மற்றும் வலது பக்கத்தில் 6 செ.மீ காயங்கள் இருப்பதை கண்டறிந்தனர்.
இந்த காயங்கள் மீன்பிடி வலைகளில் சிக்கியமையால் அல்ல, கூர்மையான பொருளால் ஏற்பட்டவை என வனவிலங்கு பாதுகாப்புத் துறை உறுதி செய்துள்ளது.
டுகோங் கண்டுபிடிப்பதற்கு சுமார் இரண்டு நாட்களுக்கு முன்பு அது இறந்து விட்டது.
IUCN சிவப்புப் பட்டியலில் டுகோங் இனம் பாதிக்கப்படக்கூடிய வகை என குறிப்பிடப்பட்டுள்ளன.
அதாவது மீன்பிடி வலைகளில் சிக்குதல், படகுகளின் ஒலி மாசுபாடு, கடல் புல் வாழ்விடங்களை அழித்தல், நீர் மாசுபாடு, ரசாயன மாசுபாடு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவை டுகோங் உயிருக்கு முக்கிய அச்சுறுத்தல்களாகும்.
டுகோங் முக்கியமாக கடல் புல் (seagrass) உண்கின்றதால், இதனை பாதுகாப்பது அவற்றின் உயிர்வாழ்விற்கு முக்கியமானதாகும்.
கடலோரப் பகுதிகளில் சுற்றுச்சூழல் சுற்றுலாவிற்கும் அவை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன என்பதைக் குறிப்பிட்டு, இந்த அரிய கடல் பாலூட்டிகளைப் பாதுகாக்க தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
மன்னார் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட கடல் பொக்கிஷம்-அழிவு நிலையிலுள்ள பாலூட்டி இனம் மன்னார் பேசாலை கடற்கரையில் நவம்பர் 30 அன்று அரிய கடல் பாலூட்டியான டுகோங் (Dugong dugon) ஒன்றின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.முதலில் உள்ளூர் மீனவர்கள் மற்றும் கடற்படை வீரர்களால் 8 அடி 2 அங்குல உயரமுள்ள ஆண் டுகோங் அவதானிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து வனவிலங்கு அதிகாரிகள் பரிசோதித்த போது, வயிற்றில் 11 செ.மீ மற்றும் வலது பக்கத்தில் 6 செ.மீ காயங்கள் இருப்பதை கண்டறிந்தனர். இந்த காயங்கள் மீன்பிடி வலைகளில் சிக்கியமையால் அல்ல, கூர்மையான பொருளால் ஏற்பட்டவை என வனவிலங்கு பாதுகாப்புத் துறை உறுதி செய்துள்ளது.டுகோங் கண்டுபிடிப்பதற்கு சுமார் இரண்டு நாட்களுக்கு முன்பு அது இறந்து விட்டது.IUCN சிவப்புப் பட்டியலில் டுகோங் இனம் பாதிக்கப்படக்கூடிய வகை என குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது மீன்பிடி வலைகளில் சிக்குதல், படகுகளின் ஒலி மாசுபாடு, கடல் புல் வாழ்விடங்களை அழித்தல், நீர் மாசுபாடு, ரசாயன மாசுபாடு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவை டுகோங் உயிருக்கு முக்கிய அச்சுறுத்தல்களாகும். டுகோங் முக்கியமாக கடல் புல் (seagrass) உண்கின்றதால், இதனை பாதுகாப்பது அவற்றின் உயிர்வாழ்விற்கு முக்கியமானதாகும்.கடலோரப் பகுதிகளில் சுற்றுச்சூழல் சுற்றுலாவிற்கும் அவை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன என்பதைக் குறிப்பிட்டு, இந்த அரிய கடல் பாலூட்டிகளைப் பாதுகாக்க தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.