மன்னார் நகரசபை எல்லைக்குள் பண்டிகைகால வியாபார நிலையங்களை அமைப்பதற்கான கேள்வி கோரல் மற்றும் விண்ணப்பங்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கை இன்று காலை தொடக்கம் ஆரம்பமாகி இடம் பெற்று வருகின்றது.
ஆண்டு தோறும் டிசம்பர் 20 திகதி தொடக்கம் நத்தார் மற்றும் புதுவருட பண்டிகைகளை முன்னிட்டு நடைபாதை பண்டிகைகால வியாபார நிலையங்களை அமைத்து விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ள குத்தகை கேள்வி மூலம் மன்னார் நகரசபை அனுமதி வழங்கும்
அதன் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டுக்கான பண்டிகைகால வியாபார நிலையங்களை குத்தைகை மூலம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் விற்பனையாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கை இன்று மற்றும் நாளைய தினம் இடம் பெறவுள்ளது
அதன் அடிப்படையில் அதிக குத்தகை தொகையை கோரும் உரிமையாளர்களுக்கு கடைகள் வழங்கப்பட்டு விற்பனை நடவடிக்கை மேற்கொள்ள நகரசபையினால் அனுமதி வழங்கப்படும்
கடந்த வருடம் மன்னார் நகரசபை எல்லைக்குள் பண்டிகைகால வியாபார நிலையங்களை குத்தகை அடிப்படையில் வழங்கியதின் ஊடாக மன்னார் நகரசபைக்கு மூன்று கோடியே இருபது இலட்சம் ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது
00:00
மன்னார் நகரசபை பண்டிகைகால வியாபார நிலையங்களை அமைப்பதற்கான கேள்வி கோரல் ஆரம்பம் மன்னார் நகரசபை எல்லைக்குள் பண்டிகைகால வியாபார நிலையங்களை அமைப்பதற்கான கேள்வி கோரல் மற்றும் விண்ணப்பங்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கை இன்று காலை தொடக்கம் ஆரம்பமாகி இடம் பெற்று வருகின்றது.ஆண்டு தோறும் டிசம்பர் 20 திகதி தொடக்கம் நத்தார் மற்றும் புதுவருட பண்டிகைகளை முன்னிட்டு நடைபாதை பண்டிகைகால வியாபார நிலையங்களை அமைத்து விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ள குத்தகை கேள்வி மூலம் மன்னார் நகரசபை அனுமதி வழங்கும்அதன் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டுக்கான பண்டிகைகால வியாபார நிலையங்களை குத்தைகை மூலம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் விற்பனையாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கை இன்று மற்றும் நாளைய தினம் இடம் பெறவுள்ளதுஅதன் அடிப்படையில் அதிக குத்தகை தொகையை கோரும் உரிமையாளர்களுக்கு கடைகள் வழங்கப்பட்டு விற்பனை நடவடிக்கை மேற்கொள்ள நகரசபையினால் அனுமதி வழங்கப்படும்கடந்த வருடம் மன்னார் நகரசபை எல்லைக்குள் பண்டிகைகால வியாபார நிலையங்களை குத்தகை அடிப்படையில் வழங்கியதின் ஊடாக மன்னார் நகரசபைக்கு மூன்று கோடியே இருபது இலட்சம் ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது