• Dec 02 2024

வல்லமை உள்ள தலைமைகளை தெரியுங்கள்- மக்கள் போராட்ட முன்னணி வேட்பாளர் பிரதீபன்!

Tamil nila / Nov 10th 2024, 6:31 pm
image

தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காக உரத்து குரல் கொடுக்கும் வல்லமை உள்ள வேட்பாளர்களை மக்கள்  தெரிவு செய்ய வேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் வன்னிமாவட்ட வேட்பாளர் மயில்வாகனம் பிரதீபன் தெரிவித்தார்.

 இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

நாங்கள் ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் பிரச்சனைகளுக்காக தொடர்ச்சியான போராட்டங்களின் மூலம் குரல் கொடுத்தவர்கள்.இன்று தமிழ்மக்கள் எதிர்நோக்ககூடிய நெருக்கடிகள் பல இருக்கின்றன. 

காணாமல்போனவர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. மக்களின் காணிகளை இராணுவம் வைத்துள்ளது. விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதன் காரணமாக வன்னிமாவட்டத்தில் பலகுடும்பங்கள் விவசாயத்தையே கைவிடும் நிலைக்கு இந்த ஆட்சியாளர்களின் செயற்பாடு இருந்துள்ளது.

எனவே நீங்கள் இம்முறை தெரிவுசெய்யும் பிரதிநிதிகள்தமிழ்மக்களின் நீண்டகால பிரச்சனைகளில் பங்கு கொண்டு அவற்றை பாராளுமன்றில் உரத்துவெளிக்கொண்டுவரும் ஆளுமை உள்வர்களாக இருக்கவேண்டும் என்பது எனது கோரிக்கை.

அந்தவகையில், மக்களின் குரலாக பிரதிபலித்த எங்களை எதிர்க்கட்சியாக சென்று பாராளுமன்றில் எமது குரலை ஒலிக்கச்செய்வதற்கு வன்னிமக்கள் ஆணை வழங்கவேண்டும். அப்போதே மக்களின் நலன்களை இன்னும் வேகமாக முன்கொண்டு செல்லக்கூடிய நிலை ஏற்படும். 

எனவே எதிர்வரும் தேர்தலில் குடைச்சின்னத்தில் போட்டியிடும் மக்கள் போராட்ட முன்னணிக்கு உங்கள் வாக்குகளை இட்டு வல்லமையுள்ள ஒரு எதிர்கட்சியினை பாராளுமன்றத்தில் உருவாக்க வேண்டும் என்றார்.

வல்லமை உள்ள தலைமைகளை தெரியுங்கள்- மக்கள் போராட்ட முன்னணி வேட்பாளர் பிரதீபன் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காக உரத்து குரல் கொடுக்கும் வல்லமை உள்ள வேட்பாளர்களை மக்கள்  தெரிவு செய்ய வேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் வன்னிமாவட்ட வேட்பாளர் மயில்வாகனம் பிரதீபன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாங்கள் ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் பிரச்சனைகளுக்காக தொடர்ச்சியான போராட்டங்களின் மூலம் குரல் கொடுத்தவர்கள்.இன்று தமிழ்மக்கள் எதிர்நோக்ககூடிய நெருக்கடிகள் பல இருக்கின்றன. காணாமல்போனவர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. மக்களின் காணிகளை இராணுவம் வைத்துள்ளது. விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதன் காரணமாக வன்னிமாவட்டத்தில் பலகுடும்பங்கள் விவசாயத்தையே கைவிடும் நிலைக்கு இந்த ஆட்சியாளர்களின் செயற்பாடு இருந்துள்ளது.எனவே நீங்கள் இம்முறை தெரிவுசெய்யும் பிரதிநிதிகள்தமிழ்மக்களின் நீண்டகால பிரச்சனைகளில் பங்கு கொண்டு அவற்றை பாராளுமன்றில் உரத்துவெளிக்கொண்டுவரும் ஆளுமை உள்வர்களாக இருக்கவேண்டும் என்பது எனது கோரிக்கை.அந்தவகையில், மக்களின் குரலாக பிரதிபலித்த எங்களை எதிர்க்கட்சியாக சென்று பாராளுமன்றில் எமது குரலை ஒலிக்கச்செய்வதற்கு வன்னிமக்கள் ஆணை வழங்கவேண்டும். அப்போதே மக்களின் நலன்களை இன்னும் வேகமாக முன்கொண்டு செல்லக்கூடிய நிலை ஏற்படும். எனவே எதிர்வரும் தேர்தலில் குடைச்சின்னத்தில் போட்டியிடும் மக்கள் போராட்ட முன்னணிக்கு உங்கள் வாக்குகளை இட்டு வல்லமையுள்ள ஒரு எதிர்கட்சியினை பாராளுமன்றத்தில் உருவாக்க வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement