• Jul 07 2025

20 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா மன்னாரில் மீட்பு!

shanuja / Jul 7th 2025, 2:13 pm
image

மன்னாரில் 20 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் இன்று (7)அதிகாலை மீட்கப்பட்டன. 


தலைமன்னார் நடுக்குடா - 30 ஆவது காற்றாலை கோபுரத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில்  மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 20 மில்லியன் கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.


மன்னாரில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில்  இராணுவ குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய விசேட  சோதனை நடவடிக்கையின் போது  குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன. 


இந்த கேரள கஞ்சா பொதிகள் இந்தியாவிலிருந்து கடல் வழியாக கொண்டு வரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இது  தொடர்பாக மன்னார் பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

20 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா மன்னாரில் மீட்பு மன்னாரில் 20 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் இன்று (7)அதிகாலை மீட்கப்பட்டன. தலைமன்னார் நடுக்குடா - 30 ஆவது காற்றாலை கோபுரத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில்  மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 20 மில்லியன் கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.மன்னாரில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில்  இராணுவ குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய விசேட  சோதனை நடவடிக்கையின் போது  குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன. இந்த கேரள கஞ்சா பொதிகள் இந்தியாவிலிருந்து கடல் வழியாக கொண்டு வரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது  தொடர்பாக மன்னார் பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement