• Aug 15 2025

புங்குடுதீவில் வெட்டிக்கொல்லப்பட்ட நபருக்கு நீதி வேண்டும்; சடலத்துடன் பொதுமக்கள் வீதிமறியல் போராட்டம்

Chithra / Aug 15th 2025, 1:20 pm
image


யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியில் வெட்டிக் கொல்லப்பட்டவரின் சடலத்துடன் பொதுமக்கள் இன்று வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 10 ஆம் அன்று தனது வீட்டில் இருந்தவேளை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை அற்புதராசாவின் கொலைக்கு நீதிவேண்டியும் கொலையாளிகளை விரைந்து கைதுசெய்யக்கோரியும் இந்த போராட்டம் சுமார் இரண்டு மணிநேரம் இடம்பெற்றது.

புங்குடுதீவு தனியார் போக்குவரத்து சங்கத்தினர் மற்றும் மக்கள் இணைந்து இன்றையதினம் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். 

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுத்த கொடியை பறக்கவிட்டு, பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் புங்குடுதீவு - யாழ்பாணம் இடையேயான போக்குவரத்து சேவைகள் இன்றையதினம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


புங்குடுதீவில் வெட்டிக்கொல்லப்பட்ட நபருக்கு நீதி வேண்டும்; சடலத்துடன் பொதுமக்கள் வீதிமறியல் போராட்டம் யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியில் வெட்டிக் கொல்லப்பட்டவரின் சடலத்துடன் பொதுமக்கள் இன்று வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த 10 ஆம் அன்று தனது வீட்டில் இருந்தவேளை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை அற்புதராசாவின் கொலைக்கு நீதிவேண்டியும் கொலையாளிகளை விரைந்து கைதுசெய்யக்கோரியும் இந்த போராட்டம் சுமார் இரண்டு மணிநேரம் இடம்பெற்றது.புங்குடுதீவு தனியார் போக்குவரத்து சங்கத்தினர் மற்றும் மக்கள் இணைந்து இன்றையதினம் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுத்த கொடியை பறக்கவிட்டு, பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் புங்குடுதீவு - யாழ்பாணம் இடையேயான போக்குவரத்து சேவைகள் இன்றையதினம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement