• Jan 10 2026

பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்; மன்னாரில் உணவகங்கள் சுற்றிவளைப்பு

Chithra / Dec 23rd 2025, 11:35 am
image


மன்னார் பொதுசுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பல்வேறு உணவகங்கள், சிற்றூடிச்சாலைகள், வீதி உணவகங்கள் மீது மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து பல்வேறு ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


குறிப்பாக பண்டிகை காலம் என்பதன் அடிப்படையில் அதிகளவான சுகாதாரமற்ற உணவுகள் மற்றும் சிற்றூண்டிகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக குறித்த ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


குறிப்பாக மன்னார் நகரசபை பகுதியில் பண்டிகைகால நடைபாதை வியாபார நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்றூண்டி மற்றும் ஐஸ்கிறீம் விற்பனை நிலையங்கள் மீதும் சுகாதரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 


அதேநேரம் மன்னார் நகர் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் அசுத்தமாக உணவு தாயாரிக்கும் பகுதியை வைத்திருந்ததுடன்

சூடான உணவுகளை சுகாதார நடைமுறைகளை மீறி பிளாஸ்ரிக் வாலியில் களஞ்சியப்படுத்தியிருந்த உணவகம் ஒன்றின் மீது சுகாதாரத்துறை சட்டநடவடிக்கை மேற்கோண்டுள்ளதோடு குறித்த உணவுகளையும் பயன்படுத்த முடியாத வகையில் அழித்தமை குறிப்பிடத்தக்கது.


பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்; மன்னாரில் உணவகங்கள் சுற்றிவளைப்பு மன்னார் பொதுசுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பல்வேறு உணவகங்கள், சிற்றூடிச்சாலைகள், வீதி உணவகங்கள் மீது மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து பல்வேறு ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக பண்டிகை காலம் என்பதன் அடிப்படையில் அதிகளவான சுகாதாரமற்ற உணவுகள் மற்றும் சிற்றூண்டிகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக குறித்த ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.குறிப்பாக மன்னார் நகரசபை பகுதியில் பண்டிகைகால நடைபாதை வியாபார நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்றூண்டி மற்றும் ஐஸ்கிறீம் விற்பனை நிலையங்கள் மீதும் சுகாதரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதேநேரம் மன்னார் நகர் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் அசுத்தமாக உணவு தாயாரிக்கும் பகுதியை வைத்திருந்ததுடன்சூடான உணவுகளை சுகாதார நடைமுறைகளை மீறி பிளாஸ்ரிக் வாலியில் களஞ்சியப்படுத்தியிருந்த உணவகம் ஒன்றின் மீது சுகாதாரத்துறை சட்டநடவடிக்கை மேற்கோண்டுள்ளதோடு குறித்த உணவுகளையும் பயன்படுத்த முடியாத வகையில் அழித்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement