• Jul 17 2025

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு பொலிசார் விடுத்த முக்கிய அறிவித்தல்!

Thansita / Jul 16th 2025, 10:32 pm
image

மொரகஹதென்ன பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றை திருடிய கும்பல் சாரதியை தாக்கி, அவரது பணம், தொலைபேசிகள், மற்றும் வண்டி ஆவணங்களை கைப்பற்றிச் சென்றுள்ளது. ஒரு பெண்ணும் குழந்தையுமுடன், இரு ஆண்கள் சேர்ந்து இக்குற்றத்தை நிகழ்த்தியுள்ளனர்.

குழந்தையை தூக்கிக்கொண்டு பெண்ணொருவர் இரு ஆண்களுடன் கொட்டாவ நகரிலிருந்து இரவு 9 மணியளவில் இந்த முச்சக்கர வண்டியில்  ஏறிய பின்பு, சாரதியின் கண்களை கையால் மூடி, முகத்தில் மிளகாய்த் தூளைத் தூவினர்.

அதனைத் தொடர்ந்து, அவரை வண்டியிலிருந்து தள்ளி வீசியுள்ளனர். தற்போது பொலிஸார் குறித்த கும்பலை தேடி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதாகவும், வாடகைக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்துபவர்கள் இரவில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு பொலிசார் விடுத்த முக்கிய அறிவித்தல் மொரகஹதென்ன பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றை திருடிய கும்பல் சாரதியை தாக்கி, அவரது பணம், தொலைபேசிகள், மற்றும் வண்டி ஆவணங்களை கைப்பற்றிச் சென்றுள்ளது. ஒரு பெண்ணும் குழந்தையுமுடன், இரு ஆண்கள் சேர்ந்து இக்குற்றத்தை நிகழ்த்தியுள்ளனர்.குழந்தையை தூக்கிக்கொண்டு பெண்ணொருவர் இரு ஆண்களுடன் கொட்டாவ நகரிலிருந்து இரவு 9 மணியளவில் இந்த முச்சக்கர வண்டியில்  ஏறிய பின்பு, சாரதியின் கண்களை கையால் மூடி, முகத்தில் மிளகாய்த் தூளைத் தூவினர். அதனைத் தொடர்ந்து, அவரை வண்டியிலிருந்து தள்ளி வீசியுள்ளனர். தற்போது பொலிஸார் குறித்த கும்பலை தேடி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதாகவும், வாடகைக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்துபவர்கள் இரவில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement