எல்ல - வெல்லவாய வீதியின் 24வது மைல்கல் பகுதியில் நேற்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.
பதுளை மருத்துவமனையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் பாலித ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் கைகால்களை இழந்துள்ளனர். காயமடைந்த சிறுவர்களின் நிலைமை மோசமாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் எத்தனை பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதை இன்னும் சரியாகச் சொல்ல முடியாது எனவும் பிற்பகலுக்குள் சரியான எண்ணிக்கை அறிவிக்கப்படும் எனவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இடிபாடுகளுக்கு இடையில் மேலும் உடல்கள் சிக்கி இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று அதிகாலை 4.00 மணி வரை காயமடைந்தவர்களையும் இறந்தவர்களையும் தேடும் பணிகள் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
15 பேரை பலியெடுத்த விபத்து - மேலும் பலர் ஆபத்தான நிலையில் எல்ல - வெல்லவாய வீதியின் 24வது மைல்கல் பகுதியில் நேற்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார். பதுளை மருத்துவமனையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் பாலித ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் கைகால்களை இழந்துள்ளனர். காயமடைந்த சிறுவர்களின் நிலைமை மோசமாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தீவிர சிகிச்சைப் பிரிவில் எத்தனை பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதை இன்னும் சரியாகச் சொல்ல முடியாது எனவும் பிற்பகலுக்குள் சரியான எண்ணிக்கை அறிவிக்கப்படும் எனவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.இடிபாடுகளுக்கு இடையில் மேலும் உடல்கள் சிக்கி இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.இன்று அதிகாலை 4.00 மணி வரை காயமடைந்தவர்களையும் இறந்தவர்களையும் தேடும் பணிகள் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.