• Aug 05 2025

சிறைக் கைதிகளுக்கு தொழில் பயிற்சி நெறிகளை வழங்க அரசாங்கம் தீர்மானம்

shanuja / Aug 5th 2025, 12:39 pm
image

சிறைக் கைதிகளுக்கு அரசாங்கம் தொழில் பயிற்சி சான்றிதழ்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.  


திருகோணமலை சிறைச்சாலை மற்றும் திருகோணமலை மாவட்ட தேசிய பயிலுனர் அதிகார சபை ஆகியவற்றுக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை நேற்று (4)மேற்கொண்ட பிரதி அமைச்சர், அங்கு சிறை அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 


சிறைக் கைதிகளுக்கான, மறுவாழ்வு என்பது கருணை அடிப்படையில் ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் மூலமே, தாங்கள் சமூகத்தில் ஓரம் கட்டப்பட்டிருக்கிறோம் என்ற சிறைக் கைதிகளின் மனநிலையை மாற்றி அவர்களை ஒரு சமூகப் பிரஜையாக வாழ வைக்க முடியும்.


இதற்காகவே, சிறைக் கைதிகளுக்கு தொழில் பயிற்சிகளை வழங்கும் திட்டத்தை, அரசாங்கம் ஏற்படுத்தி உள்ளது. ஏதாவது ஒரு தொழில்துறையில், ஆற்றலைப் பெறுகின்ற போது, தானும் ஒரு சமூக அந்தஸ்து உள்ளவன் என்ற மனநிலை, ஒவ்வொரு சிறை கைதிகளுக்கும் ஏற்படுகின்றது.


அரசாங்கம் முன்னெடுக்கின்ற இந்த வேலை திட்டத்தை, வெற்றி பெறச் செய்வதற்கு கூட்டுப் பொறுப்பு அவசியமாகும். அரச அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் தேசிய பயலுனர் அதிகார சபையின் அதிகாரிகள் அனைவரும் இணைந்து, இதனுடைய வெற்றிக்காக பாடுபட வேண்டும். எனவே, அரச ஊழியர் என்ற வகையில், தங்களுடைய பொறுப்புகளை உணர்வுடன், மேற்கொள்வீர்கள் என நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

சிறைக் கைதிகளுக்கு தொழில் பயிற்சி நெறிகளை வழங்க அரசாங்கம் தீர்மானம் சிறைக் கைதிகளுக்கு அரசாங்கம் தொழில் பயிற்சி சான்றிதழ்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.  திருகோணமலை சிறைச்சாலை மற்றும் திருகோணமலை மாவட்ட தேசிய பயிலுனர் அதிகார சபை ஆகியவற்றுக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை நேற்று (4)மேற்கொண்ட பிரதி அமைச்சர், அங்கு சிறை அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சிறைக் கைதிகளுக்கான, மறுவாழ்வு என்பது கருணை அடிப்படையில் ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் மூலமே, தாங்கள் சமூகத்தில் ஓரம் கட்டப்பட்டிருக்கிறோம் என்ற சிறைக் கைதிகளின் மனநிலையை மாற்றி அவர்களை ஒரு சமூகப் பிரஜையாக வாழ வைக்க முடியும்.இதற்காகவே, சிறைக் கைதிகளுக்கு தொழில் பயிற்சிகளை வழங்கும் திட்டத்தை, அரசாங்கம் ஏற்படுத்தி உள்ளது. ஏதாவது ஒரு தொழில்துறையில், ஆற்றலைப் பெறுகின்ற போது, தானும் ஒரு சமூக அந்தஸ்து உள்ளவன் என்ற மனநிலை, ஒவ்வொரு சிறை கைதிகளுக்கும் ஏற்படுகின்றது.அரசாங்கம் முன்னெடுக்கின்ற இந்த வேலை திட்டத்தை, வெற்றி பெறச் செய்வதற்கு கூட்டுப் பொறுப்பு அவசியமாகும். அரச அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் தேசிய பயலுனர் அதிகார சபையின் அதிகாரிகள் அனைவரும் இணைந்து, இதனுடைய வெற்றிக்காக பாடுபட வேண்டும். எனவே, அரச ஊழியர் என்ற வகையில், தங்களுடைய பொறுப்புகளை உணர்வுடன், மேற்கொள்வீர்கள் என நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement