வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் முன்னெடுப்பில் நடைபெறும் 100 நாள் செயல்முனைவின் நான்காவது வருடத்திற்கான தொடர் இம்மாதம் ஆரம்பிக்கப்பட்டு இன்று நான்காவது நாளாக மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் கட்டுமுறிவு சந்தி பகுதியில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
"சமூகப் பிரச்சினைகளும் - சமஸ்டி முறையிலான தீர்வுகளும்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் மக்கள் வாழ்வின் உண்மையான சவால்களை முன்வைத்து நிரந்தர தீர்வுகளுக்கான அரசியல் உரையாடலை உருவாக்கும் நோக்கில் இந்த 100 நாள் செயல் முனைவு நடைபெறுகின்றது.
இலங்கை அரசே இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீள பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை உறுதி செய்க, சமஸ்டியே தீர்வு, எங்கள் வளம் எங்கள் உரிமை என்கின்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் கவனஈர்ப்பினை முன்னெடுத்தனர்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய தலைமைத்துவங்களுடன் இலங்கையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது ஜனநாயகம், கட்டமைப்பு மாற்றம், இன மத பேதமின்மை எனும் கொள்கைகளை முன்வைத்து இவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர்
எனினும் அரசியல் தீர்வு குறித்து தேசிய மக்கள் சக்தி அரசு மௌனம் காத்து வருகின்றது எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டதுடன்.
வடக்கு கிழக்கில் ராணுவ மயமாக்கம், காணி அபகரிப்பு, தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு, மகாவலி குடியேற்றம் மற்றும் சிங்கள மயமாக்கம், பௌத்த மயமாக்கம், தமிழ் மொழி உரிமை புறக்கணிப்பு, இனவாத அச்சுறுத்தல்கள் ஆகியன தொடர்ந்த வண்ணம் உள்ளதாகவும் இந்த அடக்குமுறைகளை வைத்துக்கொண்டு இன மத பேதமின்மை குறித்து அரசு கதைப்பது நேர்மையின்மையும் ஆகும் எனவும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.
இனவாதத்தில் சார்ந்து இருந்த பழைய அரசுகளைப் போல் இல்லாத தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது நிலையானதும் கௌரவமானதும் உரிமைகளுடன் கூடிய சமஸ்டி முறையிலான அரசியல் அதிகார பகிர்வை உறுதிப்படுத்தும் தீர்வு திட்டத்தை உடன் முன்னெடுக்க வேண்டும் எனவும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.
இக்கவனஈர்ப்பு போராட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டாளர்கள், சிவில் சமூக செயல்பாட்டாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
"சமூகப் பிரச்சினைகளும் - சமஸ்டி முறையிலான தீர்வுகளும்"- 100 நாள் செயலமர்வு இன்று மட்டக்களப்பில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் முன்னெடுப்பில் நடைபெறும் 100 நாள் செயல்முனைவின் நான்காவது வருடத்திற்கான தொடர் இம்மாதம் ஆரம்பிக்கப்பட்டு இன்று நான்காவது நாளாக மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் கட்டுமுறிவு சந்தி பகுதியில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது."சமூகப் பிரச்சினைகளும் - சமஸ்டி முறையிலான தீர்வுகளும்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் மக்கள் வாழ்வின் உண்மையான சவால்களை முன்வைத்து நிரந்தர தீர்வுகளுக்கான அரசியல் உரையாடலை உருவாக்கும் நோக்கில் இந்த 100 நாள் செயல் முனைவு நடைபெறுகின்றது.இலங்கை அரசே இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீள பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை உறுதி செய்க, சமஸ்டியே தீர்வு, எங்கள் வளம் எங்கள் உரிமை என்கின்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் கவனஈர்ப்பினை முன்னெடுத்தனர்.தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய தலைமைத்துவங்களுடன் இலங்கையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது ஜனநாயகம், கட்டமைப்பு மாற்றம், இன மத பேதமின்மை எனும் கொள்கைகளை முன்வைத்து இவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர் எனினும் அரசியல் தீர்வு குறித்து தேசிய மக்கள் சக்தி அரசு மௌனம் காத்து வருகின்றது எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டதுடன்.வடக்கு கிழக்கில் ராணுவ மயமாக்கம், காணி அபகரிப்பு, தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு, மகாவலி குடியேற்றம் மற்றும் சிங்கள மயமாக்கம், பௌத்த மயமாக்கம், தமிழ் மொழி உரிமை புறக்கணிப்பு, இனவாத அச்சுறுத்தல்கள் ஆகியன தொடர்ந்த வண்ணம் உள்ளதாகவும் இந்த அடக்குமுறைகளை வைத்துக்கொண்டு இன மத பேதமின்மை குறித்து அரசு கதைப்பது நேர்மையின்மையும் ஆகும் எனவும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.இனவாதத்தில் சார்ந்து இருந்த பழைய அரசுகளைப் போல் இல்லாத தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது நிலையானதும் கௌரவமானதும் உரிமைகளுடன் கூடிய சமஸ்டி முறையிலான அரசியல் அதிகார பகிர்வை உறுதிப்படுத்தும் தீர்வு திட்டத்தை உடன் முன்னெடுக்க வேண்டும் எனவும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.இக்கவனஈர்ப்பு போராட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டாளர்கள், சிவில் சமூக செயல்பாட்டாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.