• Aug 04 2025

10 மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தாக்கம் குறித்து சிவப்பு எச்சரிக்கை

Chithra / Aug 4th 2025, 1:34 pm
image


பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து 10 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இன்று இரவு 11.00 மணி வரை இவ் எச்சரிக்கை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

அதன்படி, மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.


10 மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தாக்கம் குறித்து சிவப்பு எச்சரிக்கை பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து 10 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று இரவு 11.00 மணி வரை இவ் எச்சரிக்கை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement